*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.
நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்
1) இந்தியா எந்த நாட்டில் இருந்து 31 (M Q 9 B) ட்ரோன்களை வாங்க உள்ளது?
*A) அமெரிக்கா
B) வங்கதேசம்
C) மியான்மர்
D) ஃபிரான்ஸ்
E) விடை தெரியவில்லை
2) வழிபாட்டுத் தள சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?
A) 1947
B) 1963
C) 1977
*D) 1991
E) விடை தெரியவில்லை
3) பின்வரும் கூற்றுக்களை கவனிக்க :
கூற்று 1 : வரி வசூலிப்பதில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது
கூற்று 2 : வரி வசூலிப்பதில் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில் உள்ளது.
A) கூற்று 1 மட்டும் சரி
B) கூற்று 2 மட்டும் சரி
C) இரண்டு கூற்றுகளும் சரி
*D) இரண்டு கூற்றுகளும் தவறு
E) விடை தெரியவில்லை
4) உலக ஈர நீல நாள் ஆண்டுதோறும் பிப்ரவரி இரண்டாம் நாள் கடைபிடிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் என்ன?
*A) ஈர நிலங்கள் மற்றும் மனித நல்வாழ்வு
B) ஈரநில மறுசீரமைப்பு
C) மக்கள் மற்றும் இயற்கைக்கான சதுப்பு நில நடவடிக்கை
D) ஈர நிலங்களும் நீரும்
E) விடை தெரியவில்லை
5) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட புதிய ஆய்வு கப்பலின் பெயர் என்ன?
A) I N S சாரா
*B) I N S சந்தாயக்
C) வாயு சக்தி
D) I N S விக்ராந்த்
E) விடை தெரியவில்லை
6) கீழடி அகழாய்வு முதன் முறையாக யாருடைய மேற்பார்வையில் நடைபெற்றது?
A) வெங்கடேசன்
B) அனந்த பத்மநாபன்
*C) அமர்நாத் ராமகிருஷ்ணன்
D) சார்லஸ் மேஷன்
E) விடை தெரியவில்லை
7) 18 வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து சில மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளன அவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க?
A) சிக்கிம்
*B) மேகாளயா
C) ஒடிசா
D) அருணாச்சலப் பிரதேசம்
E) விடை தெரியவில்லை
8) 2026 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் இடங்களில் தவறானது எது?
A) மெக்சிகோ
B) அமெரிக்கா
C) கனடா
*D) அர்ஜென்டினா
E) விடை தெரியவில்லை
9) எந்த செயற்கை நிறமூட்டும் பொருள் உள்ளதால், தமிழ்நாடு பஞ்சுமிட்டாய்க்கு தடை செய்துள்ளது?
*A) ரோடமைன் B
B) ரெட்டின் C1
C) ரெட்டின் D
D) ரோடமைன் D3
E) விடை தெரியவில்லை
10) பின்வரும் வைரஸ்களில் எது கர்ப்பப்பை வாய் புற்றுநோயை உண்டாக்குகிறது?
A) H1 N1 V
B) H S2 V
*C) H P V
D) H P S V
E) விடை தெரியவில்லை
11) இந்தியா சூரிய மின் உற்பத்தியில் உலக அளவில் எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 1
B) 2
C) 3
*D) 4
E) விடை தெரியவில்லை
12) தமிழ்நாட்டின் முதல் ரோபோ யானை எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?
A) வண்டலூர்
B) பிள்ளையார்பட்டி
C) பாலமேடு
*D) கூடலூர்
E) விடை தெரியவில்லை
13) இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே நடைபெற்ற முதல் ராணுவ பயிற்சிக்கு ‘சதா டான்சிக்’ என பெயரிடப்பட்டது?
A) அமெரிக்கா
*B) சவுதி அரேபியா
C) வங்கதேசம்
D) ஈரான்
E) விடை தெரியவில்லை
14) பின்வருவனவற்றுள் எது “WINS” அமைப்பினை உருவாக்கியுள்ளது?
A) மத்திய வானிலை மற்றும் காலநிலை அமைச்சகம்
B) மத்திய தொழில்துறை அமைச்சகம்
*C) மத்திய வேளாண் அமைச்சகம்
D) மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
E) விடை தெரியவில்லை
15) பின்வரும் வாயுக்களில் எது கண்ணீர் புகை குண்டுகளில் பயன்படுத்தப்படுகிறது?
A) C O2
*B) C L2
C) N A
D) N H O3
E) விடை தெரியவில்லை
16) தமிழ்நாட்டில் விண்வெளி தொழில் உந்து சக்தி பூங்கா எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது?
A) சென்னை
B) தேனி
*C) தூத்துக்குடி
D) ராமநாதபுரம்
E) விடை தெரியவில்லை
17) உலக ஜனநாயக தரவரிசையில் இந்தியாவின் இடம் என்ன?
A) 62
B) 64
C) 65
*D) 66
E) விடை தெரியவில்லை
18) இந்தியாவில் முதன்முறையாக எந்த மாநிலம் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது?
*A) உத்தரகாண்ட்
B) டெல்லி
C) ஆந்திர பிரதேசம்
D) உத்திர பிரதேசம்
E) விடை தெரியவில்லை
19) பஞ்சேஸ்வர் பல்நோக்கு திட்டம் இந்தியா மற்றும் எந்த நாட்டிற்கு இடையே கையெழுத்தானது?
A) மாலத்தீவு
B) மியான்மர்
C) சவுதி அரேபியா
*D) நேபாளம்
E) விடை தெரியவில்லை
20) தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் முதன் முதலாக இலாக்கா இல்லாத அமைச்சராக இருந்தவர் யார்?
A) முரசொலி மாறன்
*B) ராஜாஜி
C) பொன்முடி
D) தயாநிதி மாறன்
E) விடை தெரியவில்லை
21) முதன்முறையாக ஆசிய மகளிர் பேட்மிட்டன் பட்டத்தை வென்ற நாடு எது?
*A) இந்தியா
B) ஃபிரான்ஸ்
C) தாய்லாந்து
D) மெக்சிகோ
E) விடை தெரியவில்லை
22) தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறாத நபர் யார்?
A) கேபினட் அமைச்சர்
B) எதிர்க்கட்சித் தலைவர்
*C) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
D) பிரதமர்
E) விடை தெரியவில்லை
23) உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் நியமனம் பற்றி கூறும் அரசியலமைப்பு ஷரத்து எது?
A) 224
B) 232
*C) 217
D) 243
E) விடை தெரியவில்லை
24) பின்வருமினைகளில் எத்தனை இணைகள் சரியாக உள்ளன?
1) சூரியத் தோட்டம், – முல்லை பூங்கா கன்னியாகுமரி
2) மருதம் பூங்கா – தஞ்சாவூர்
3) பலாப்பழம் மதிப்பு கூட்டல் மையம் – பனையூர்
A) 1
*B) 2
C) 3
D) எதுவும் இல்லை
E) விடை தெரியவில்லை
25) தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பின் எந்த விதியை மீறியதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது?
A) விதி 19
*B) விதி 19 (1)A
C) விதி 18 (2) A
D) விதி 20 (1)A
E) விடை தெரியவில்லை
கணித வினாக்கள்
1) ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 செ, மி² மற்றும் அதன் உயரம் 6 செ, மீ எனில் அதன் கண அளவு என்ன?
A) 60 க, செ, மீ³
B) 90 க, செ, மீ³
C) 120 க, செ, மீ³
*D) 180 க, செ, மீ³
E) விடை தெரியவில்லை
2) ஒருவகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்கு பிறகு அதன் எண்ணிக்கை என்ன?
A) 10,266
*B) 10,626
C) 10,622
D) 11,626
E) விடை தெரியவில்லை
3) 5 பொருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது லாபமாக கிடைக்கிறது. எனில் லாப சதவீதம் என்ன?
A) 25%
B) 20%
C) 50%
*D) 5%
E) விடை தெரியவில்லை
4) ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது?
A) 6
B) 9
*C) 8
D) 65
E) விடை தெரியவில்லை
5) (1³+2³+3³ …..15³) – (1+2+3…15) இன் மதிப்பு என்ன?
A) 14,400
B) 14,200
*C) 14,280
D) 14,520
E) விடை தெரியவில்லை
6) கீழ்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
4:5, 8:15, 3:10, 1:2
*A) 4:5
B) 8:15
C) 3:10
D) 1:2
E) விடை தெரியவில்லை
7) இரு எண்களின் மீ, சி, ம ஆனது, மீ, பொ, வ வின் 6 மடங்காகும். மீ, பொ, வ 12 மற்றும் ஓர் எண் 36 எனில் மற்றொரு எண் என்ன?
A) 48
B) 12
C) 36
*D) 24
E) விடை தெரியவில்லை
8) ரூ 800ஐ கூட்டு வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கும், ரூ 840 ஐ நான்கு ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?
A) 2 1/2%
B) 4%
*C) 5%
D) 6 2/3%
E) விடை தெரியவில்லை
9) 21:x = y:25 = 9:15 எனில், y மற்றும் x இன் மதிப்பு முறையே?
A) 15, 9
*B) 15, 35
C) 35, 10
D) 35, 15
E) விடை தெரியவில்லை
10) a³+b³whole divide a²+2ab+b²ஐ a²-b² whole divide a-b ஆல் பெருக்கினால் கிடைப்பது
*A) a²-ab+b²
B) a³+b³
C) a³+ab+b³
D) a³-b³
E) விடை தெரியவில்லை
11) A மற்றும் B இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர். எனில், மூவரும் சேர்ந்து அவ் வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்?
*A) 10 நாட்கள்
B) 12 நாட்கள்
C) 14 நாட்கள்
D) 15 நாட்கள்
E) விடை தெரியவில்லை
12) 15% ஆண்டு வட்டியில் மூன்று ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1,134. எனில், அசலை காண்க?
A) ரு, 12,000
*B) ரு, 16,000
C) ரு, 8,000
D) ரு, 6,000
E) விடை தெரியவில்லை
13) 8 1/2 மீட்டர் என்பது 11 1/3 மீட்டரில் எத்தனை சதவீதம்?
A) 60%
B) 72%
*C) 75%
D) 68%
E) விடை தெரியவில்லை
14) ஒரு கன சதுரத்தின் மொத்த புறப்பரப்பு 486 செ, மீ² எனில், அதன் பக்கபரப்பும் கன அளவு முறையே?
A) 729 செ, மீ², 324 செ, மீ³
*B) 324 செ, மீ², 729 செ, மீ³
C) 324 செ, மீ³, 729 செ, மீ²
D) 739 செ, மீ², 344 செ, மீ³
E) விடை தெரியவில்லை
15) இரு எண்களின் மீ, பொ, வ 2. மற்றும் அவற்றின் மீ, சி, ம 154. அவ்விரு எங்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில், அவற்றின் கூடுதல் என்ன?
*A) 36
B) 26
C) 56
D) 46
E) விடை தெரியவில்லை
16) ஒரு பெருக்குத் தொடர் வரிசையில் 6 ஆவது உறுப்பு 972 மற்றும் அதன் பொது வித்தியாசம் 3 எனில், 8 ஆவது உறுப்பு என்ன?
A) 2,916
B) 3,888
C) 5,832
*D) 8,748
E) விடை தெரியவில்லை
17) ஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில், 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஓவர்களின் ஓட்ட வீதம் என்ன?
*A) 6.25
B) 6.5
C) 6.75
D) 7
E) விடை தெரியவில்லை
18) தொடர் தள்ளுபடிகள் முறையே 20% மற்றும் 25% என்றவாறு தரப்பட்டு ஒரு சலவை இயந்திரம் ரு,15,000 க்கு விற்கப்பட்டது எனில், அதன் குறித்த விலை என்ன?
A) ரு, 25,500
B) ரு, 23,000
C) ரு, 20,000
*D) ரு, 25,000
E) விடை தெரியவில்லை
19) 8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பார்கள். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பார்கள் எனில், ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
A) 320 நாட்கள்
*B) 140 நாட்கள்
C) 280 நாட்கள்
D) 150 நாட்கள்
E) விடை தெரியவில்லை
20) இரு கோலங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில், அதன் கண அளவுகளின் விகிதம் என்ன?
A) 4:7
B) 64:49
C) 16:49
*D) 64:343
E) விடை தெரியவில்லை
21) ஒரு உள்ளீடற்ற கோலத்தின் கண அளவு 11,352/7 கண செ, மீ மற்றும் அதன் வெளி ஆரம் 8 செ, மீ எனில் உள் ஆரத்தை காண்க?
A) 6 செ, மீ
*B) 5 செ, மீ
C) 7 செ, மீ
D) 8 செ, மீ
E) விடை தெரியவில்லை
22) ஒரு வரிசையில் சில நபர்கள் நின்று கொண்டிருக்கின்றனர். ஒரு குழந்தை அந்த வரிசையில் இடமிருந்து 14 ஆவது இடத்திலும், ஒரு பெண் வளமிருந்து 8 ஆவது இடத்திலும் நிற்கின்றனர். குழந்தைக்கும் பெண்ணுக்கும் இடையில் 4 நபர்கள் இருக்கும் வரிசையில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?
A) 16
B) 29
*C) 26
D) 32
E) விடை தெரியவில்லை
23) 2/5, 6/25, 18/125 ….. என்ற பெருக்குத் தொடர் வரிசையில் பொது விகிதம் காண்க?
*A) 3/5
B) 4/5
C) 4/25
D) 1/5
E) விடை தெரியவில்லை
24) மதிப்பு காண்க?
32:13 :: 29:?
A) 10
B) 42
*C) 85
D) 12
E) விடை தெரியவில்லை
25) 8 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்களின் எண்ணிக்கையைக் காண்க?
A) 108
B) 110
C) 111
*D) 112 E) விடை தெரியவில்லை