ஆன்சலிவன் போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (24) 6 ஏப்ரல், 2024 வினாவிடைகள்

 

ஜனவரி 2024, நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

கணித வினாக்கள்

*குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

ஜனவரி 2024, நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

1) இந்தியாவின் முதல் ‘அனைத்து பெண்கள் சைனிக் பள்ளி’ எங்கு திறக்கப்பட்டுள்ளது?

A) குஜராத்

B) மகாராஷ்டிரா

*C) உத்திரபிரதேசம்

D) டெல்லி

e) விடை தெரியவில்லை

2) பின்வரும் கூற்றுக்களை கவனிக்க :

கூற்று – 1 : 17 ஆவது பிரிக்ஸ் உச்சிமாநாடு ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற உள்ளது.

கூற்று – 2 : பிரிக்ஸ் கூட்டமைப்பில் பத்து உறுப்பு நாடுகள் உள்ளன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

*D) இரண்டும் தவறு

E) விடை தெரியவில்லை

3) நகரமயமாதலுக்கான தேசிய ஆணையத்தை அமைத்த பிரதமர் யார்?

*A) ராஜீவ் காந்தி

B) தேவ கௌடா

C) மன்மோகன் சிங்

D) நரேந்திர மோடி

E) விடை தெரியவில்லை

4) 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெற்ற தமிழக அலங்கார ஊர்தியின் கருப்பொருள் என்ன?

A) வாக்களிப்பதின் அவசியம்

B) இயற்கையின் தேவை

*C) உத்திரமேரூர் கல்வெட்டின் குடவோலை முறை

D) விடுதலைப் போராட்டத்தில் தமிழக மகளிர் பங்கு

E) விடை தெரியவில்லை

5) பின்வருவனவற்றை பொருத்துக :

a) மக்களுக்கான தெருக்கள் – 1) இந்தூர்

b) சுத்தமான நகரம் – 2) பெங்களூரு

c) சிறந்த பொதுப் போக்குவரத்து – 3) பிம்ரி ஜிஞ்சாவாட்

d) தகவல் தொழில்நுட்ப தலைநகரம் – 4) டெல்லி

A) 1, 2, 3, 4

*B) 3, 1, 4, 2

C) 2, 1, 3, 4

D) 4, 1, 3, 2

E) விடை தெரியவில்லை

6) தைவான் ஜலசந்தி பின்வருவனவற்றுள் எதனை இணைக்கிறது?

A) சீனா மற்றும் அரபிக்கடல்

B) தென் சீனக் கடல் மற்றும் ஜப்பான்

C) தென் சீன கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல்

*D) கிழக்கு சீனக் கடல் மற்றும் தென் சீனக் கடல்

E) விடை தெரியவில்லை

7) தேசிய ஸ்டாட்டப் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

A) ஜனவரி 10

*B) ஜனவரி 16

C) ஜனவரி 21

D) ஜனவரி 30

E) விடை தெரியவில்லை

8) “கஞ்சர்” என்பது எந்த இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு சிறப்பு படை பயிற்சி?

*A) இந்தியா மற்றும் கிறிகிஸ்தான்

B) இந்தியா மற்றும் நேபாளம்

C) இந்தியா மற்றும் கஜகஸ்தான்

D) ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்

E) விடை தெரியவில்லை

9) உச்ச நீதிமன்ற நீதிபதியின் நியமனம் பற்றி கூறும் சரத்து எது?

A) 128

B) 224

C) 121

*D) 124

E) விடை தெரியவில்லை

10) எத்தனையாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது?

A) 9

B) 10

C) 11

*D) 12

E) விடை தெரியவில்லை

11) குடியரசு தலைவர் உரையை தயாரிப்பது யார்?

A) குடியரசுத் தலைவர் அலுவலகம்

*B) பிரதமர் அலுவலகம்

C) துணை குடியரசுத் தலைவர்

D) மத்திய அமைச்சரவை

E) விடை தெரியவில்லை

12) 2024 ஆம் ஆண்டிற்கான கலைஞர் பொற்கிழி விருது நாவல் பிரிவில் யாருக்கு வழங்கப்பட்டது?

A) வைஜெயந்தி மாலா

B) கிருஷ்ணன்

*C) தமிழ் மகன்

D) பத்மா சுப்பிரமணியம்

E) விடை தெரியவில்லை

13) ராணுவத்தின் முதல் பெண் சுபேதார் யார்?

A) மீனா சிங்

B) பார்வதி பருவா

C) சந்யா

*D) ப்ரீத்தி ரஜக்

E) விடை தெரியவில்லை

14) 2024 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் சின்னம் என்ன?

*A) வீரமங்கை

B) தம்பி

C) யானை

D) வால்

E) விடை தெரியவில்லை

15) தமிழ்நாட்டில் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி எது?

A) சோழிங்கநல்லூர்

*B) கீழ்வேளூர்

C) நாகப்பட்டினம்

D) பெண்ணாகரம்

E) விடை தெரியவில்லை

16) பின்வரும் கூற்றுக்களை கவனிக்க :

கூற்று – 1 : 16 ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக அரவிந்த் பணகாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

கூற்று -:2 : இவர் நிதி ஆணையத்தின் முதல் துணைத் தலைவராக பணியாற்றியவர்.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

E) விடை தெரியவில்லை

17) இந்தியாவில் உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் எது?

*A) தமிழ்நாடு

B) கேரளா

C) மகாராஷ்டிரா

D) குஜராத்

E) விடை தெரியவில்லை

18) 19 ஆவது அணிசேரா இயக்க உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

*A) உகாண்டா

B) பூட்டான்

C) கஜகஸ்தான்

D) ஃபிரான்ஸ்

E) விடை தெரியவில்லை

19) உலக அளவில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் நிலை — ?

A) 74

B) 89

*C) 93

D) 107

E) விடை தெரியவில்லை

20) பின்வரும் கூற்றுக்களை கவனிக்க :

கூற்று – 1 : அயலகத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த “எனது கிராமம்” திட்டம் உதவுகிறது.

கூற்று -:2 : எட்டு வெவ்வேறு பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன.

A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

*C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

E) விடை தெரியவில்லை

21) புவி அறிவியல் அமைச்சகத்தின் தற்போதுள்ள ஐந்து திட்டங்கள் பின்வரும் எதனுள் இணைக்கப்பட உள்ளது ?

*A) பிரித்வி

B) அஜய்

C) விக்ராந்த்

D) விகாஸ்

E) விடை தெரியவில்லை

22) குழந்தை இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில் தேசிய அளவில் தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் உள்ளது?

A) 1

*B) 2

C) 3

D) 4

E) விடை தெரியவில்லை

23) வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் திட்டம் என்ன?

A) எம்மன்

*B) வேர்களைத் தேடி

C) உறவுகள்

D) நம் தேசம்

E) விடை தெரியவில்லை

24) இந்தியாவில் மிதக்கும் சோலார் மின் உற்பத்தி நிலையம் எந்த நதியில் அமைய உள்ளது?

A) சராயூ

B) சிந்து

C) கிருஷ்ணா

*D) நர்மதா

E) விடை தெரியவில்லை

25) பின்வரும் கூற்றுகளை கவனிக்க :

கூற்று – 1 : நாடாளுமன்றத்தில் 245 ராஜ்யசபா இடங்கள் உள்ளன.

கூற்று -:2 :  ஆறில் ஒரு பங்கு உறுப்பினர்கள் மூன்று வருடங்களில் ஓய்வு பெறுகின்றனர்.

*A) கூற்று 1 மட்டும் சரி

B) கூற்று 2 மட்டும் சரி

C) இரண்டும் சரி

D) இரண்டும் தவறு

E) விடை தெரியவில்லை

கணித வினாக்கள்

1) x:y = 2:3 எனில், 6x – y:3x+2y = ?

A) 5:4

*B) 3:4

C) 9:7

D) 0

E) விடை தெரியவில்லை

2) செவ்வகம் ஒன்றின் அகலமானது அதன் நீளத்தை விட 27செ, மீ குறைவாக உள்ளது. மேலும் அதன் சுற்றளவு 3மீ, 6செ,மீ ஆக இருப்பின் அச்செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே?

A) 100 செ,மீ, 73 செ,மீ,

B) 80 செ,மீ, 53 செ,மீ,

*C) 90 செ,மீ, 63 செ,மீ,

D) 103.5 செ,மீ, 76.5 செ,மீ,

E) விடை தெரியவில்லை

3) இரண்டு பகடைகள் ஒருசேர உருட்டப்படுகிறது. கூடுதல் 8 விழுவதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை எவ்வளவு?

*A) 5

B) 6

C) 3

D) 8

E) விடை தெரியவில்லை

4) a²+b² = 117 ஆகவும்  ab = 54 ஆகவும் இருந்தால், a+b ÷ a-b இன் மதிப்பு என்ன?

A) 117/54

B) 4

*C) 5

D) 15

E) விடை தெரியவில்லை

5) 0.14 செ,மீ, விட்டம் கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவு என்ன?

*A) 0.0077 செ,மீ

B) 0.77 செ,மீ

C) 0.077 செ,மீ

D) 0.7 செ,மீ

E) விடை தெரியவில்லை

6) தள்ளுபடி 20% தரப்படும் போது ஒரு பொருளின் விற்ற விலை ரு, 24. அதே பொருளுக்கு 30% தள்ளுபடி தரப்பட்டிருப்பின் விற்பனை விலை எவ்வளவாக இருக்கும்?

*A) 21

B) 30

C) 36

D) 20

E) விடை தெரியவில்லை

7) பின்வருவனவற்றுள் எந்த ஒரு மதிப்பு மிக உயர்ந்ததாக இருக்கும்?

A) 3√2

B) 3√4

C) 4√2

*D) 4√3

E) விடை தெரியவில்லை

8) A மற்றும் B ஆகியோருள் A இளையவர். அவர்களின் வயதுகளின் வித்தியாசத்தில் 7 மடங்கானது, அவர்களின் வயதுகளின் கூடுதலுக்கு சமம். 12 ஆண்டுகளுக்குப் பிறகு B இன் வயதும், A இன் தற்போதைய வயதும் 5:3 என்ற விகிதத்தில் இருப்பின் A இன் தற்போதைய வயது என்ன?

A) 30

*B) 36

C) 42

D) 48

E) விடை தெரியவில்லை

9) கூட்டு வட்டி முறையில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகையானது 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது எனில், தொடக்க அசலைப்போல் 8 மடங்காக எடுத்துக்கொள்ளும் வருடங்கள் எவ்வளவு?

A) 80 வருடங்கள்

B) 40 வருடங்கள்

C) 20 வருடங்கள்

*D) 30 வருடங்கள்

E) விடை தெரியவில்லை

10) CAMEL என்பது X Z N V O என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது எனில் TIGER என்பதை அதே குறியீட்டு முறையில் என்னவாக குறிக்க வேண்டும்?

A) G T V R I

B) H S R V I

*C) G R T V I

D) H T V R I

E) விடை தெரியவில்லை

11) (x²-9) (x-3) whole ÷4 மற்றும் x²+6x+9 whole ÷8 ஆகியவற்றின் மீ, பொ, வ என்ன?

A) (x+3)² ÷ 4

B) (x-3)² ÷8

*C) (x+3) ÷8

D) (x-3) /4

E) விடை தெரியவில்லை

12) 47 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் 22 மாணவர்களுக்கு கால் பந்து விளையாட தெரியும் 22 மாணவர்களுக்கு கூடைப்பந்து மட்டும் விளையாட தெரியும் எனில், இரண்டு விளையாட்டுகளும் விளையாடத் தெரியாதவர்கள் எத்தனை பேர்?

A) 5

*B) 3

C) 4

D) 2

E) விடை தெரியவில்லை

13) 0.09090909 ……

 என்ற சுழல் தசம எண்ணிற்கு சமமான விகிதமுறு எண் எது?

A) 9/100

B) 90909/10,00,000

C) 11/100

*D) 1/11

E) விடை தெரியவில்லை

14) இரண்டு கோணங்கள் 4:9 என்ற விகிதத்திலும் அவற்றின் மிகை நிரப்புக் கோணங்கள் 8:3 என்ற விகிதத்திலும் உள்ளன எனில், அவ்விரு கோணங்கள் முறையே?

A) 30, 80

*B) 60, 135

C) 40, 90

D) 80, 30

E) விடை தெரியவில்லை

15) 0.02, 0.006, 0.0018, …… என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு யாது?

A) 0.0054

B) 0.0036

*C) 0.00054

D) 0.00036

E) விடை தெரியவில்லை

16) ஒரு வங்கியில் ஆறு மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் ரு, 2500 க்கு வட்டி ரு, 100 கிடைக்கிறது எனில், அதே வட்டி வீதத்தில் 9 மாதங்களுக்கு அசல் ரு, 3,200 க்கு கிடைக்கும் வட்டி எவ்வளவு?

A) 180

B) 200

C) 210

*D) 192

E) விடை தெரியவில்லை

17) ஒரு ரயில் நிலைய கடிகாரம் 1 மணிக்கு ஒரு தரம், 2 மணிக்கு இரண்டு தரம் என்றவாறு ஒலிக்கும். ஒரு நாளில் அந்த கடிகாரம் எத்தனை முறை ஒலிக்கும்?

*A) 156

B) 250

C) 300

D) 78

E) விடை தெரியவில்லை

18) ஒரு சதுரத்தின் பரப்பளவு 169 செ,மீ². அதன் பரப்பளவு 69% அதிகரிக்கப்படுமாயின், சதுரத்தின் பக்கங்கள் அதிகரிப்பின் சதவீதம் என்ன?

A) 1.3%

*B) 30%

C) 33.33%

D) 26%

E) விடை தெரியவில்லை

19) இரண்டு மின் தொடர் வண்டிகள் ஒரே நேரத்தில் ஒரு ரயில் நிலையத்திலிருந்து செல்கின்றன. ஒன்று மேற்கு நோக்கியும் மற்றொன்று வடக்கு நோக்கியும் பயணிக்கின்றன. முதல் வண்டியின் வேகமானது இரண்டாவது வண்டியின் வேகத்தை காட்டிலும் 5 கி,மீ/ மணி அதிகமாக இருக்கிறது. ஒரு மணி நேரம் கழிந்த பின் இரண்டு வண்டிகளுக்கும் இடைப்பட்ட தூரம் 25 கி,மீ ஆக இருப்பின், முதல் மின்தொடர் வண்டியின்

 வேகம் என்ன?

*A) 20 கி,மீ/ மணி

B) 15 கி,மீ/ மணி

C) 25 கி,மீ/ மணி

D) 10 கி,மீ/ மணி

E) விடை தெரியவில்லை

20) புள்ளிகள் (a,b) மற்றும் (-a,-b) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட தூரம் என்ன?

A) 2a

B) 0

C) 2a+2b

*D) 2√a²+b²

E) விடை தெரியவில்லை

21) 2/3 மற்றும் 5/9 ஆகியவற்றின் மீ,சி,ம காண்க?

*A) 10/3

B) 10/9

C) 10/8

D) 5/3

E) விடை தெரியவில்லை

22) ஒரே அளவு ஆரம் கொண்ட முழு கோளத்தின் புறப்பரப்பிற்கும், அரைக்கோளத்தின் மொத்த பரப்பளவிற்கும் உள்ள விகிதம் என்ன?

*A) 4:3

B) 4/3:2/3

C) 1:2

D) 2:1

E) விடை தெரியவில்லை

23) பின்வருவனவற்றிற்கு x இன் மதிப்பை காண்க?

2:x::x:32

A) 64

B) 34

C) 30

*D) 8

E) விடை தெரியவில்லை

24) பின்வரும் எண் தொடரில் கேள்விக்குறியிடப்பட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?

2, 6, 14, 30,  126

*A) 62

B) 72

C) 58

D) 76

E) விடை தெரியவில்லை

25) ஒரு தொகை 24 ஆண்டுகளில் தனிவட்டி வீதத்தில் நான்கு மடங்கு ஆகிறது. எனில், வட்டி வீதம் எவ்வளவு?

A) 12.3%

*B) 12.5%

C) 10%

D) 22%

E) விடை தெரியவில்லை