ஆன்சலிவன் பயிற்சி மையம் வழங்கும் வாராந்திர மாதிரித்தேர்வு (7) விடைக்குறிப்புகள்

 

தமிழ் வினாக்கள்

வரலாறு வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

பொருளியல் வினாக்கள்

கணித வினாக்கள்

குறிப்பு: * குறியிடப்பட்டவை சரியான விடைகள் எனக்கொள்க.

தமிழ் வினாக்கள்

1. “செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்

நந்தா விளக்கனைய நாயகியே! – முந்தை

மொழிக்கெல்லாம் மூத்தவளே!”

இப்பாடல் அடிகள் யாருடையது

a. பாரதிதாசன்

b. பாரதியார்

c. நாமக்கல் கவிஞர்

*d. து.அரங்கன்

2. பாரதியாரை சிந்துக்குத் தந்தை என்று புகழ்ந்தவர் யார்

a. சுரதா

*b. பாரதிதாசன்

c. நாமக்கல் கவிஞர்

d. வானிதாசன்

3. பாரதியார் huநடத்திய இதழ்களைத் தேர்வு செய்க

1. இந்தியா

2. விஜயா

3. சுதேசமித்திரன்

*a. 1, 2

b. 1, 3

c. 2, 3

d. இவை அனைத்தும்

4. மொழிக்குறிய ஒழுங்குமுறை ——- எனப்படுகிறது

a. ஒழுக்கம்

b. பழக்க வழக்கம்

*c. மரபு

d. இலக்கணம்

5. கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள் பற்றிய சரியான கூற்றைக்காண்க

1. ‘ஸ’ எனும் வடமொழி எழுத்து காணப்படுகிறது

2. மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தப்பட்டது

3. எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை

a. 1, 2 சரி

*b. 1, 3 சரி

c. 2, 3 சரி

d. அனைத்தும் சரி

6. தமிழ் எழுத்துகள் பற்றிய சரியான கூற்றுகளைக் காண்க

1. வளைந்த கோடுகளால் அமைந்த பழைய தமிழ் எழுத்து தமிழெழுத்து எனப்படுகிறது

2. தமிழெழுத்து என்பது இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரி வடிவம் ஆகும்

3. சோழமண்டலப் பகுதிகளில் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை கிடைக்கும் சாசனங்களில் வட்டெழுத்துகளே இடம்பெற்றுள்ளன

4. கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன

a. 1, 2 சரி

b. 1, 4 சரி

c. 3, 4 சரி

*d. 2, 4 சரி

7. அகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்ட எழுத்துகள் எந்த எழுத்துகளாகக் கருதப்பட்டன

a. ஐகார எழுத்துகள்

b. ஔகார எழுத்துகள்

c. மகர எழுத்துகள்

*d. நெடில் எழுத்துகள்

8. இரா.இளங்குமரனார் எழுதாத நூல் எது

a. இலக்கண வரலாறு

b. தமிழிசை இயக்கம்

c. தனித்தமிழ் இயக்கம்

*d. தேவநேயம்

9. எழுத்துகளின் இடப்பிறப்பு பற்றிய சரியான கூற்றைக் காண்க

1. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

2. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

3. மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

4. இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a. 1, 2, 3 சரி

b. 1, 2, 4 சரி

c. 2, 3, 4 சரி

*d. அனைத்தும் சரி

10. மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் எவை

a. ற், ன்

b. ச், ஞ்

*c. த், ந்

d. ட், ண்

11. பறவைகளையும் அவற்றிற்குறிய ஒலிமரபுகளையும் பொருத்துக

a. கூகை – 1, அலறும்

b. ஆந்தை – 2. குனுகும்

c. மயில் – 3. குழறும்

d. புறா – 4. அகவும்

a. 1 2 3 4

b. 3 1 2 4

*c. 3 1 4 2

d. 3 4 2 1

12. சொல்லையும் பொருளையும் பொருத்துக

a. மெத்த – 1. கூட்டம்

b. சேகரம் – 2. சேதம்

c. வாகு – 3. மிகவும்

d. வின்னம் – 4. சரியாக

a. 3 1 2 4

*b. 3 1 4 2

c.

 3

 4 2 1

d. 2 1 4 3

13. தமிழகப் பழங்குடிகள் என்ற நூலின் ஆசிரியர் யார்

a. வெங்கம்பூர் சாமிநாதன்

b. சே.ராசு

c. வானமாமலை

*d. பக்தவத்சல பாரதி

14. செவ்விந்தியர்கள் தங்களது சகோதரர்களாகக் கருதாதது எது

a. மான்கள்

b. குதிரைகள்

c. கழுகுகள்

*d. மலர்கள்

15. காடர்களின் கதைகளைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர் யார்

a. மனிஷ் சாண்டி

b. மாதுரி ரமேஷ்

*c. வ.கீதா

d. பக்தவத்சல பாரதி

16. ஏவல் வினைமுற்று பற்றிய தவறான கூற்றைக் காண்க

1. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.

2. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும்.

3. விகுதி பெறாமல் வரும்.

4. இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும் பொதுவாய் வரும்.

a. 1, 2 தவறு

b. 3, 4 தவறு

c. 1, 2, 4 தவறு

*d. 1, 3, 4 தவறு

17. குறிப்பு வினைமுற்று பற்றிய சரியான கூற்றைக் காண்க

1. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டதாக அமையும்

2. காலத்தை வெளிப்படையாகக் காட்டும்

3. செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும்

a. 1, 2 சரி

*b. 1, 3 சரி

c. 2, 3 சரி

d. அனைத்தும் சரி

18. குறிப்பு வினைமுற்றுகளை அவற்றின் அடிப்படை வகைகளோடு பொருத்துக

a. பொன்னன் – 1. சினை

b. ஆதிரையான் – 2. இடம்

c. தென்னாட்டான் – 3. பொருள்

d. கண்ணன் – 4. காலம்

*a. 3 4 2 1

b. 3 4 1 2

c. 4 3 2 1

d. 4 3 1 2

19. தமிழ் எண்களை வரிசைப்படுத்துக

1. ரு

2. கூ

3. அ

4. எ

a. 1 2 3 4

b. 1 2 4 3

c. 1 3 2 4

*d. 1 4 3 2

20. நாட்களையும் கொண்டாடப்படும் தினங்களையும் பொருத்துக

a. உலக ஈர நில நாள் – 1. செப்டம்பர் 16

b. உலக ஓசோன் நாள் 2. பிப்ரவரி 2

c. உலக இயற்கை நாள் – 3. அக்டோபர் 5

d. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள்  அக்டோபர் 3

a. 2 1 3 4

*b. 2 1 4 3

c. 2 4 1 3

d. 2 3 1 4

21. இளமையில் கல் என்பது எவ்வகைத்தொடர்

a. செய்தித் தொடர்

b. வினாத்தொடர்

*c. விளைவுத் தொடர்

d. உணர்ச்சித் தொடர்

22. ஆங்கிலச் சொற்களை அவற்றிற்கு இணையான தமிழ்ச் சொற்களோடு பொருத்துக

a. சமவெளி – 1. Thicket

b. பள்ளத்தாக்கு – 2. Plain

c. புதர் – 3. Ridge

d. மலைமுகடு – 4. Valley

a. 2 4 3 1

b. 3 4 1 2

c. 1 3 2 4

*d. 2 4 1 3

23. “வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.”

இக்குறளில் பயின்றுவந்துள்ள அணி எது

a. உவமை அணி

b. எடுத்துக்காட்டு உவமை அணி

*c. இல்பொருள் உவமை அணி

d. பிறிது மொழிதல் அணி

24. திருக்குறள் பொருட்பாலில் இல்லாத இயல் எது

a. அரசியல்

b. அமைச்சியல்

c. ஒழிபியல்

*d. ஊழியல்

25. பிரவித் துன்பத்தை நீக்கும் மருந்துகளாக நீலகேசி கூறாதது எது

a. நல்லறிவு

b. நற்காட்சி

c. நல்லொழுக்கம்

*d. நல்வினை

26. “கூழை யேநீ குடித்தாலும்

குளித்த பிறகு குடியப்பா”

இப்பாடல் அடிகள் இடம்பெறும் நூூல் எது

a. பழமொழி நானூறு

b. நீலகேசி

*c. மலரும் மாலையும்

d. ஏலாதி

27. கவிமணி தேசிக விநாயகனார் எத்தனை ஆண்டுகள் ஆசிரியராகப்

 பணியாற்றினார்

a. 16

b. 26

*c. 36

d. 46

28. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது எதன் நீட்சியாக உள்ளது.

a. மருந்தின்

b. உடற்பயிற்சியின்

*c. உணவின்

d. வாழ்வின்

29. கவிதை எழுதுதல், நடனம் ஆடுதல், நடித்தல் ஆகியவற்றைச் செய்ய ————- நமக்கு  உதவுகிறது

*a. மூளையின் வலது பாதி

b. மூளையின் இடது பாதி

c. முதுகுத் தண்டு

d. இவை அனைத்தும்

30. கொடுக்கப்பட்டுள்ள நூல்களுல் சுஜாதா எழுதாதது எது

a. என் இனிய எந்திரா

b.  மீண்டும் ஜீனோ

c.  ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

*d. கால் முளைத்த கதைகள்

31. எச்சங்களின் வகைகளை அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளுடன் பொருத்துக

a. எழுதிய கடிதம் – 1. குறிப்புப் பெயரெச்சம்

b. சிறிய கடிதம் – 2. தெரிநிலைப் பெயரெச்சம்

c. எழுதி வந்தான் – 3. தெரிநிலை வினையெச்சம்

d. மெல்ல வந்தான் – 4. குறிப்பு வினையெச்சம்

a. 2 1 4 3

*b. 2 1 3 4

c. 2 3 4 1

d. 2 3 1 4

32. உவமைத் தொடர்களை அவை வெளிப்படுத்தும் பொருளோடு பொருத்துக

a. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல – 1. ஒற்றுமையின்மை

b. நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல – 2. பயனற்ற செயல்

c. பசு மரத்து ஆணி போல – 3. தற்செயல் நிகழ்வு

d. விழலுக்கு இறைத்த நீர் போல – 4. எளிதில் மனத்தில் பதிதல்

*a. 3 1 4 2

b. 3 4 2 1

c. 2 1 4 3

d. 2 3 1 4

33. கொடுக்கப்பட்டுள்ள நூல்களுள் குமரகுருபரர் எழுதாத நூல் எது

a. கயிலைக் கலம்பகம்

b. கந்தர் கலிவெண்பா

*c. சரஸ்வதி மாலை

d. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

34. “ஆத்திரம் கண்ணை

மறைத்திடும் போது

அறிவுக்கு வேலை கொடு – உன்னை

அழித்திட வந்த

பகைவன் என்றாலும்

அன்புக்குப் பாதை விடு!”

இப்பாடல் அடிகள் யாருடையது

a. கவிமணி தேசிக விநாயகனார்

b. குமரகுருபரர்

*c. ஆலங்குடி சோமு

d. வானிதாசன்

35. “கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்க்கு அறிவுறுத்தப் பெறுங் காலமே, தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும்.”

என்று கூறியவர் யார்

a. விஜயலட்சுமி பண்டிட்

b. பாரதியார்

*c. திரு.வி.க

d. குலோத்துங்கன்

36. இயற்கைத் தவம் என்று திரு.வி.க குறிப்பிடுவது

a. கம்பராமாயணம்

b. தேவாரம்

*c. சிந்தாமணி

d. பெரியபுராணம்

37. ஜெயகாந்தனோடு பல்லாண்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

a. சுஜாதா

b. வெங்கம்பூர் சுவாமிநாதன்

*c. பி.ச. குப்புசாமி

d. இரா.இளங்குமரனார்

38. காமராசர் பதவியைத் துறந்தார் என்ற தொடரில் இரண்டாம் வேற்றுமையில் அடங்கும் எப்பொருள் வெளிப்படுகிறது

a. ஆக்கல்

b. அழித்தல்

*c. நீத்தல்

d. அடைதல்

39. மூன்றாம் வேற்றுமை பற்றிய தவறான கூற்றைக் காண்க

1. ஆல், ஆன், ஒடு, ஓடு ஆகிய நான்கும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் ஆகும்.

2. இவற்றுள் ஒடு, ஓடு ஆகியவை கருவிப்பொருள், கருத்தாப் பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வரும்

3. ஆல், ஆன் ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

a. 1, 2 தவறு

b. 1, 3 தவறு

*c. 2, 3 தவறு

d. அனைத்தும் தவறு

40. எந்த வேற்றுமைக்கு

 உறிய உருபுடன் ஆக என்னும் அசை சேர்ந்து வரும்

a. மூன்றாம் வேற்றுமை

*b. நான்காம் வேற்றுமை

c. ஐந்தாம் வேற்றுமை

d. ஆறாம் வேற்றுமை

41. சுந்தரர் பற்றிய தவறான கூற்றைக் காண்க

1. சுந்தரர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் போன்ற சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்

2. இவர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன

3. பெரியபுராணத்தின் முதல் நூல் சுந்தரர் இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி ஆகும்

a. 1 தவறு

b. 2 தவறு

*c. 3 தவறு

d. அனைத்தும் தவறு

42. பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

a. செறிவு எனப்படுவது — கூறியது மறாஅமை

b. அறிவு எனப்படுவது — பேதையார் சொல் நோன்றல்

*c. முறை எனப்படுவது — மறை பிறர் அறியாமை

d. பண்பு எனப்படுவது — பாடறிந்து ஒழுகுதல்

43. கலித்தொகை எப்பாவகையால் ஆன நூல்

a. வெண்பா

b. ஆசிரியப்பா

c. வஞ்சிப்பா

*d. கலிப்பா

44. கலை அழகு மிகுந்த மண்கலங்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன

a. ஆதிச்சநல்லூர்

*b. செம்பியன் கண்டியூர்

c. கீழடி

d. கொடுமணல்

45. கைவினைப் பொருள்கள் செய்ய ஏற்ற மூங்கில் வகை எது

a. கல் மூங்கில்

b. மலை மூங்கில்

*c. கூட்டு மூங்கில்

d. காட்டு மூங்கில்

46. பாய் வகைகளும் அவற்றின் பயன்பாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமற்ற இணையைத்தேர்வு செய்க

1. குழந்தைகளைப் படுக்கவைப்பது — திண்ணைப்பாய்

2. உணவு உண்ணப் பயன்படுவது — பந்திப்பாய்

3. திருமணத்திற்குப் பயன்படுத்துவது — பட்டுப்பாய்

4. உட்காரவும் படுக்கவும் உதவுவது — தடுக்குப்பாய்

a. 1, 2

b. 2, 3

c. 3, 4

*d. 1, 4

47. “நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்”

இவ்வடிகள் இடம்பெறும் நூல் எது

a. பெரும்பாணாற்றுப்படை

b. சிறுபாணாற்றுப்படை

c. அகநானூறு

*d. புறநானூறு

48. இசைக்கருவி வகைகளில் பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

a. குடமுழா — தோல்கருவி

*b. கொம்பு — நரம்புக்கருவி

c. சங்கு — காற்றுக்கருவி

d. சாலரா — கஞ்சக்கருவி

49. தொகைநிலைத் தொடர் வகைகளும் அவற்றிற்குறிய எடுத்துக்காட்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்வு செய்க

a. மலர்விழி — உவமைத்தொகை

*b. பனைமரம் — பண்புத்தொகை

c.  அடுகொடி – வினைத்தொகை

d. சிதம்பரம் சென்றான் — வேற்றுமைத்தொகை

50. தொகாநிலைத் தொடர்களை எடுத்துக்காட்டுகளோடு பொருத்துக

a. வரைந்த ஓவியம் – 1. இடைச்சொல் தொடர்

b. சென்றனர் வீரர் – 2. வினையெச்சத் தொடர்

c. மற்றுப் பிற – 3. பெயரெச்சத் தொடர்

d. தேடிப் பார்த்தான் – 4. வினைமுற்றுத் தொடர்

*a. 3 4 1 2

b. 3 4 2 1

c. 4 3 2 1

d. 4 3 1 2

வரலாறு வினாக்கள்

51) பொருந்தாத இணையை கண்டறிக?

A) சமுத்திரகுப்தர் – அலகாபாத் தூண் கல்வெட்டு

*B) முதலாம் சந்திரகுப்தர் – மதுரா பாறை கல்வெட்டு

C) ஸ்கந்தகுப்தர் – பிடாரி தூண் கல்வெட்டு

D) இரண்டாம் சந்திரகுப்தர் – உதயகிரி குகை கல்வெட்டு

52) நாணயங்களில் தன் உருவத்தை பொறித்த முதல் குப்த அரசர் யார்?

*A) ஸ்ரீகுப்தர்

B) கடவ்ச் குப்தர்

C) முதலாம் சந்திரகுப்தர்

D) சமுத்திரகுப்தர்

53) சமுத்திரகுப்தர் குறித்த தவறான கூற்றை தேர்வு செய்க?

கூற்று 1 ; குப்த வம்சத்தின் தலைசிறந்த அரசர்.

கூற்று 2 ; தென்னிந்தியாவை சார்ந்த தலைசிறந்த பல்லவரசனான விஷ்ணு கோப்பணை தோற்கடித்தார்.

கூற்று 3 ; இலங்கையைச் சார்ந்த புத்தவம்ச அரசரான ஸ்ரீ மேகவர்மனின் சமகாலத்தவர் ஆவார்.

கூற்று 4 ; சமுத்திரகுப்தர் தலைசிறந்த விஷ்ணு பக்தர்.

A) கூற்று 1, 3, 4 சரி 2 தவறு

B) கூற்று 3, 4 தவறு 1, 2 சரி

C) கூற்று 4 மட்டும் தவறு

*D) அனைத்து கூற்றுகளும் சரி

54) பொருத்துக

A) ஹரி சேனர் – 1. ஜோதிடர்

B) தன்வந்திரி – 2. கட்டிடக்கலை நிபுணர்

C) காகப்பா நகர் – 3. மருத்துவர்

D) சன்கு – 4. சமஸ்கிருத புலவர்

A) 3 1 4 2

*B) 4 3 1 2

C) 4 1 2 3

D) 4 2 3 1

55) இரண்டாம் சந்திரகுப்தற்கு வழங்கப்படும் வேறு பெயர்களுள் சரியானவற்றை தேர்வு செய்க?

1) நரேந்திர சந்திரர்

2) சிம்ம சந்திரர்

3) நரேந்திர சிம்மன்

4) விக்ரம தேவராஜன்

A) 1, 2, 3 சரி

B) 1, 3, 4 சரி

C) 1, 4 மட்டும் சரி

*D) அனைத்தும் சரி

56) கயா பாழடைந்து இருந்தது கபில வஸ்து காடானது பாடலிபுத்திரத்தை சார்ந்த மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள் என்பது யாருடைய கூற்று?

A) இட்ஜின்

*B) பாஹியான்

C) யுவான் சுவாங்

D) இரண்டாம் சந்திரகுப்தர்

57) பொருத்துக

A) சேத்ரா – 1. வனம் அல்லது காட்டு நிலம்

B) கிழார் – 2. வேளாண்மைக்கு உகந்த நிலம்

C) அபர கேதா – 3 .தரிசு நிலம்

D) வஸ்தி – 4. குடியிருப்புக்கு தகுந்த நிலம்

*A) 2 3 1 4

B) 2 1 4 3

C) 3 2 4 1

D) 4 2 1 3

58) குப்தர் கால வரிகளில் தவறானதை தேர்வு செய்க?

A) ஹாலி வகரா – கலப்பை வைத்திருப்போர் அனைவரும் செலுத்த வேண்டிய வரி

B) போகா – அரசருக்கு வழங்க வேண்டிய பழங்கள், விறகு, பரிசுப் பொருட்கள் போன்றவை

*C) பாகா – விளைச்சலில் நான்கில் ஒரு பங்கு அரசருக்கு செலுத்த வேண்டும்

D) கிளிப்தா உப கிளிப்தா – நில பதிவுக்கு அளிக்கப்படும்  விற்பனை வரி

59) நூல் நூல் ஆசிரியருடன் பொருத்துக

A) பஞ்சதந்திரம் – 1. பதாஞ்சலி

B) மகா பாஷ்யம் – 2. அஷ்ட தியாகி

C) சமண ராமாயணம் – 3. விஷ்ணு சர்மா

D) பாணிணி – 4. விமலா

A) 3 4 1 2

B) 4 2 1 3

C) 2 3 1 4

*D) 3 1 4 2

60) நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த சரியான கூற்றை தேர்வு செய்க.

*A) நாளந்தா பல்கலைக்கழகம் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

B) நாளந்தா பல்கலைக்கழகம் குறித்த முறையான அகழாய்வு 1916 இல் தொடங்கப்பட்டது.

C) 12 மட ஆலயங்கள் 8 கற்கோவில்கள் கண்டறியப்பட்டது.

D) நாளந்தா பல்கலைக்கழகம் ஓர் சமண மடாலயம் ஆகும்.

61) மெஹ்ரோலி இரும்புத்தூண் கல்வெட்டு எந்த குப்த பேரரசரின் சாதனை பற்றி குறிப்பிடுகிறது?

A) இரண்டாம் சந்திரகுப்தர்

B) சமுத்திரகுப்தர்

C) குமார குப்தர்

*D) முதலாம் சந்திரகுப்தர்

62) சக்கராதித்யன் என அழைக்கப்படுபவர் யார்?

*A) குமார குப்தர்

B) பாலாதித்யன்

C) ஸ்கந்தகுப்தர்

D) ஸ்ரீ குப்தர்

63) புருஷா என்னும் கடவுளுடன் ஒப்பிடப்படும் குப்த அரசர் யார்?

A) குமார குப்தர்

B) முதலாம் சந்திரகுப்தர்

*C) சமுத்திரகுப்தர்

D) ஸ்ரீ குப்தர்

64) குப்தர் காலம் குறித்த தவறான கூற்று எவை?

கூற்று1 ; இந்து மத மறுமலர்ச்சியின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

கூற்று 2 ; கட்டிடக்கலை, சிற்பக்கலை ஓவியக் கலையின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.

கூற்று 3 ; செவ்வியல் இலக்கியத்தில் பொற்காலம்.

கூற்று 4 ; குப்தர் காலத்தில் வட்டிக்கு கடன் வழங்கும் முறை நடைமுறையில் இருந்தது.

A) கூற்று 1, 2 தவறு

B) கூற்று 1, 3 தவறு

C) கூற்று 1, 2, 4 சரி 3 தவறு

*D) அனைத்தும் சரி

65) சமுத்திரகுப்தரை இந்தியாவின் நெப்போலியன் என அழைத்தவர் யார்?

*A) வின்சன்ட் ஸ்மித்

B) ஆரி சர்மா

C) சத்தியநாத ஐயர்

D) ஆர் சி மஜ்ம்தார்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

66) 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புள்ளியியல் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

A) ராவி

B) R கணேஷ்

*C) C R ராவ்

D) லட்சுமணன்

67) “A Health” திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

A) அசாம்

B) கேரளா

C) பிஹார்

*D) உத்தரகாண்ட்

68) நேட்டோ கூட்டமைப்பில் எத்தனையாவது உறுப்பு நாடாக ஃபின்லாந்து இணைந்துள்ளது?

A) 30

*B) 31

C) 32

D) 33

69) “தேசிய ஓய்வூதிய திட்டத்தை” மறு ஆய்வு செய்ய யார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது?

A) ஆனந்த நாகேஸ்வரன்

B) சந்துரு

C) விஷ்ணுகுமார்

*D) சோமநாதன்

70) சலீம் துரானி  கீழ்கண்ட எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

*A) கிரிக்கெட்

B) கபடி

C) கால்பந்து

D) பேட்மிட்டன்

பொருளியல் வினாக்கள்

71) கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்திய பொருளாதாரம் கிராமத்தை சார்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது கிராமப் பொருளாதாரம் ஆனது சுயசார்பு பொருளாதாரமாக இருந்தது.

கூற்று 2 : ஆங்கிலேய ஆட்சியின் போது தொழிற்சாலைகள் வளர அனுமதிக்கப்பட்டன. பொருளாதார மற்றும் அமைப்பு ரீதியான இந்த மாற்றம் இந்திய பொருளாதார நிலையை பின்தங்கிய நிலைக்கு தள்ளியது.

A) கூற்று ஒன்று சரி இரண்டு தவறு

B) இரண்டு கூற்றுகளும் தவறு

*C) கூற்று ஒன்று சரி கூற்று இரண்டு சரி

D) கூற்று ஒன்று தவறு இரண்டு கூற்று சரி

72) ஜமீன்தாரி முறை அல்லது நிலசுவான் தாரா முறையை லார்டு காரன் வாலிஸ் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?

A) 1795

*B)1793

C) 1773

D) 1720

73) இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு —— தொழிலையே சார்ந்து இருந்தனர்.

A) நெசவு

B) சிறு தொழில்

*C) வேளாண்மை

D) கைவினைப் பொருட்கள்

74) இந்தியாவில் தொழிற் கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு?

*A) 1948 ஏப்ரல் 6

B) 1948 ஜூலை 1

C) 1948 ஏப்ரல் 28

D) 1948 மே 17

75) கீழ்க்கண்டவற்றுள் பசுமை புரட்சி 1960 – 61 ல் எத்தனை மாவட்டங்களில் “வழிநடத்தும் திட்டம்” மூலமாக புதிய தொழில் நுட்பத்தை வேளாண் துறையில் பயன்படுத்தும் முயற்சியில் எடுக்கப்பட்டது?

A) 25 மாவட்டங்கள்

B) 9 மாவட்டங்கள்

C) 14 மாவட்டங்கள்

*D) 7 மாவட்டங்கள்

76) பொருத்துக

அ) பழுப்புப்புரட்சி – 1. எண்ணெய் வித்துக்கள்

ஆ) நீலப் புரட்சி  – 2. தோல் பொருள்கள்

இ) மஞ்சள் புரட்சி – 3. பழங்கள்

ஈ) தங்கப் புரட்சி – 4. மீன்

*A) 2 4 1 3

B) 4 1 2 3

C) 1 3 4 2

D) 3 1 2 4

77) பின்வருவனவற்றுள் பசுமை புரட்சியின் சாதனைகள் பற்றிய கூற்றுக்களில் சரியானவற்றை தேர்வு செய்க:

கூற்று 1 : அதிக விளைச்சல் தரக்கூடிய வகைகளான நெல், கோதுமை, மக்காச்சோளம் மற்றும் சோளம் போன்ற பயிர்களுக்கு மட்டுமே பசுமைப்புரட்சி முக்கியத்துவம் கொடுத்தது.

கூற்று 2 : விதைகள், உரங்கள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் தண்ணீருக்கான பேரளவு மூலதனம் தேவைப்படுகிறது.

கூற்று 3 : வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக நிதி ஆதாரங்கள் வழங்கப்பட்டன.

A) கூற்று 2, 3 சரி

B) கூற்று 1, 2 சரி

*C) கூற்று 1, 3 சரி

D) அனைத்தும் சரி

78) இரண்டாவது பசுமைப் புரட்சியின் முக்கிய நோக்கம் 2006 – 2007 ல் 214 மில்லியன் டன்களாக இருந்த உணவுப்பயிர் உற்பத்தியை 2020 ல் —– மில்லியன் டன்களாக உயர்த்ததலாகும்.

A) 320

*B) 400

C) 375

D) 550

79) பொதுத்துறையில் எஃகு நிறுவனங்களை பொருத்துக :

             இடம்                         உதவி

அ) ரூர்கேலா (ஒரிசா) – 1. இங்கிலாந்து அரசு

ஆ) பிலாய் (மத்திய பிரதேசம்) – 2. ரஷ்யா அரசு

இ) துர்காபூர் (மேற்கு வங்காளம்) – 3. இந்திய அரசு

ஈ) விஜய் நகர் (கர்நாடகா) – 4. ஜெர்மனி அரசு

A) 4 3 1 2

B) 3 1 4 2

*C) 4 2 1 3

D) 2 3 4 1

80) கீழ்காணும் கூற்றுகளை ஆராய்க:

கூற்று 1 : இந்திய எஃகு நிறுவனம் 1974 நிறுவப்பட்டது மற்றும் எஃகு துறையை மேம்படுத்தும் பொறுப்பும் அதற்கு அளிக்கப்பட்டது.

கூற்று 2 : தற்போது இந்தியா எஃகு உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது உயரிய இடத்தில் உள்ளது.

A) கூற்று இரண்டும் சரி

*B) கூற்று 1 சரி கூற்று 2 தவறு

C) கூற்று இரண்டும் தவறு

D) கூற்று 2 சரி கூற்று 1 தவறு

81) 1969 – 50 கோடிக்கு மேல் வைப்புத் தொகை கொண்ட எத்தனை வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன?

A) 7

B) 6

*C) 14

D) 12

82) திட்டக்குழு என்பதற்கு மாற்றாக நிதி ஆயோக் என்னும் அமைப்பு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது?

A) 2017 ஜூலை 1

B) 2014 செப்டம்பர் 15

C) 2016 நவம்பர் 8

*D) 2015 ஜனவரி 1

83) கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை கண்டறிக

கூற்று 1 : குறு சேவை நிறுவனங்களில் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கூற்று 2 : சிறு சேவை நிறுவனங்களில் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் பத்து லட்சத்தை விட அதிகமாகவும் 2 கோடிக்கும் மிகாமலும் இருக்க வேண்டும்.

கூற்று 3 : நடுத்தர சேவை நிறுவனங்களில் உபகரணங்களுக்கான முதலீடு ரூபாய் 2 கோடியை விட அதிகமாகவும் 5 கோடிக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

A) கூற்று 1 மற்றும் 2 சரி

B) கூற்று 2 மற்றும் 3 சரி

C) கூற்று 1 மற்றும் 3 சரி

*D) அனைத்தும் சரி

84) பொருத்துக

அ) எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் – 1. 1978 – 1979

ஆ) சுழல் திட்டம் – 2. 1990 – 1991

இ) திட்ட விடுமுறை காலம் – 3. 1992 – 1997

ஈ) ஆண்டு திட்டங்கள் – 4. 1966 – 1969

A) 4 3 1 2

B) 2 4 3 1

*C) 3 1 4 2

D) 4 1 2 3

85) இரயத்துவாரி முறை அல்லது சொந்த சாகுபடி முறை முதன் முதலில் எங்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

*A) தமிழ்நாடு

B) கர்நாடகா

C) மத்திய பிரதேசம்

D) இராஜஸ்தான்

கணித வினாக்கள்

86) ஒரு குளிர்சாதன பெட்டியானது விற்பனை வரியோடு சேர்த்து ₹ 14,355 க்கு விற்கப்படுகிறது. அதன் வாங்கிய விலை ₹ 13,050 எனில், விற்பனை வரி சதவீதம் காண்க?

A) 11%

B) 8%

C) 9%

*D) 10%

87) ஒருவர் 10 பொருட்களை ரூபாய் 8 க்கு வாங்கி, 10 பொருட்களை ரூபாய் 1.25 வீதம் விற்பனை செய்கிறார். எனில், லாப சதவீதம் காண்க?

A) 50 1/2%

*B) 56 1/4%

C) 20%

D) 52%

88) ஒருவர் ஒரு காரை ரூபாய் 2 லட்சத்துக்கு வாங்கி, அதனை பழுது பார்ப்பதற்கு ரூபாய் 50,000 செலவு செய்தார். பிறகு அந்த காரை ரூபாய் 3 லட்சத்துக்கு விற்பனை செய்தார் எனில், அவர் அடைந்த லாப சதவீதம் என்ன?

A) 10%

*B) 20%

C) 25%

D) 50%

89) ஓர் எண்ணின் 300 சதவீதமானது 120. எனில், அவ்வெண்ணின் 60% காண்க?

A) 6

B) 12

*C) 24

D) 48

90) 120 ஐ விட 15 சதவீதம் குறைவான எண்ணெய் காண்க?

*A) 102

B) 98

C) 106

D) 100

91) ஒரு தொழிலாளி ரூபாய் 11,250 ஐ ஊக்கத்தொகையாக பெறுகிறார். இது அவரின் ஆண்டு வருமானத்தில் 15 சதவீதம். எனில், அவரின் மாத வருமானம் எவ்வளவு?

A) 5,520

B) 6,220

C) 6,520

*D) 6,250

92) ரொட்டித் துண்டுகளின் விலை 25 சதவீதமாக உயர்ந்தால், 300 ரொட்டி துண்டுகள் வாங்கும் தொகையில் எவ்வளவு ரொட்டி துண்டுகள் வாங்க முடியும்?

A) 225

*B) 240

C) 250

D) 275

93) 3.5 ஐ சதவீத அடிப்படையில் விவரித்தால் என்ன கிடைக்கும்?

A) 100%

B) 3.5%

C) 35%

*D) 350%

94) 12 பொருட்களின் வாங்கிய விலைக்கும், 10 பொருட்களின் விற்ற விலைக்கும் சமம். எனில், லாப சதவீதம் என்ன?

A) 18%

B) 16 1/2%

*C) 20%

D) 25%

95) ஒரு விற்பனையாளர் கைகடிகாரத்தின் மீது 10 சதவீதம் தள்ளுபடி தந்த பிறகும் 26 சதவீதம் லாபம் அடைகிறார். அதன் குறித்த விலை ரூபாய் 840 எனில், வாங்கிய விலை என்ன?

*A) 600

B) 650

C) 700

D) 800

96) 12 சதவீதத்தின் மதிப்பு 600 எனில், 64 சதவீதத்தின் மதிப்பு எவ்வளவு?

A) 3,100

B) 3,150

*C) 3,200

D) 3,250

97) ரவி என்பவரின் சம்பளமானது தற்போதைய சம்பளத்தை விட 20 சதவீதம் உயர்கிறது பின்னர் ஒரு ஆண்டு கழித்து அவரின் சம்பளம் 20 சதவீதம் குறைகிறது எனில் அவர் அடையும் நட்ட சதவீதம் என்ன

A) 2%

*B) 4%

C) 0%

D) 1%

98) ராகுல் என்பவர் ஒரு மடிக்கணினியை ரூபாய் 40,000 க்கு  வாங்கினார். பின்னர் 5 சதவீதம் செலவு செய்து பழுது நீக்குகிறார். பின்னர் அந்த மடிக்கணினியை 10 சதவீத நட்டத்திற்கு வி்ற்றுவிடுகிறார் எனில், அவர் அடைந்த நஷ்ட தொகை எவ்வளவு?

A) 1,700

B) 2,700

*C) 2,200

D) 2,100

99) ஒரு பொருளின் குறித்தவில்லை ரூபாய் 600. அதற்கு தள்ளுபடியாக 5 சதவீதம் வழங்கப்பட்டு, பின்னர் அதனோடு சேர்த்து 10 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது. எனில், அப்பொருளின் விற்பனை விலை என்ன?

*A) 627

B) 527

C) 617

D) 597

100) ஒரு பொருளை ரூபாய் 6,400 க்கு விற்பதால் 20% நஷ்டம் ஏற்படுகிறது. எனில், அப்பொருளின் அடக்க விலை

 எவ்வளவு?

A) 8,400

B) 7,400

C) 8,500

*D) 8,000