TNPSC தொகுதி-II மற்றும் II-A திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டம்

 

தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் அண்மையில் நேரடி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (CCSE) தொகுதி-II, (நேர்முகத் தேர்வுகள்) மற்றும் தொகுதி-II-A நேர்முகத் தேர்வுகள் அல்லாத தேர்வுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இப்பதிவில், தேர்வர்கள் TNPSC வெளியிட்ட இந்தப் புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்தும், தொகுதி-II மற்றும் II-A தேர்வுகளுக்கான முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுக்கான முழுப் பாடத்திட்டத்தையும் தமிழிலேயே தெரிந்துக் கொள்ளலாம்.

புதிய பாடத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

தொகுதி-II, II-A திருத்தியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் சில முக்கிய அம்சங்கள்.

  • இந்தப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க, தமிழ் மொழித் தாளானது, முதல்நிலை (Preliminary) மற்றும் முதன்மைத் தேர்வுகளில் (Mains examination) இணைக்கப்பட்டுள்ளது.
  • முதன்மைத் தேர்வில் கட்டாயத் தமிழ்மொழித் தகுதி தாள் சேர்க்கப்பட்டுள்ளது.
  • 2019-ஆம் ஆண்டு TNPSC வெளியிட்ட தொகுதி-II பாடத்திட்டத்தில் மொழித்தாள் நீக்கப்பட்டிருந்தது. இப்பொழுது, முதல்நிலை தேர்வில் மொழிப்பாடமானது மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
  • மேலும், மொழிப்பாடத்தை பொருத்தவரை தேர்வர்கள் பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகியவற்றுள் எதாவது ஒன்றைத் தெரிவு செய்துக் கொள்ளலாம்.
  • முதன்மைத் தேர்வானது இரண்டு தாள்களைக் கொண்டதாக இருக்கும்.
  • இதில் முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்ட தகுதித் தேர்வாகவும், இரண்டாம் தாள் 300 மதிப்பெண்களைக் கொண்ட அடுத்தநிலைக்கு தெரிவு செய்யும் தாளாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
  • முதன்மைத் தேர்வில், தாள்-1இல் குறைந்தபட்ச மதிப்பெண் (40 மதிப்பெண்) பெறாத தேர்வர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது.
  • குறிப்பாக, தாள்-II-இல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில் மட்டுமே விடை அளிக்க வேண்டும்.
  • இறுதியாக, தாள்-II-இல் பெறும் மதிப்பெண்கள் மட்டும் நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு தரநிர்ணயத்திற்கு கணக்கில் கொள்ளப்படும்.

தொகுதி-II, II-A முதல்நிலைத் தேர்வு பாடத்திட்டம்

இப்பதிவு, பொதுத் தமிழை அடிப்படையாக கொண்டு தேர்விற்கு தயார் செய்பவர்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது.

பொது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட பாடத்திட்டம் விரைவில் இத்தளத்தில் இடம்பெரும்.

முதல்நிலைத் தேர்வை பொருத்தவரை, பொதுத் தமிழ் பகுதியானது (10-ஆம் தரத்தில்) 100 கோள்குறி வகைகேள்விகளைக் கொண்டிருக்கும்.

பொது அறிவு பகுதியானது, (பட்டப்படிப்புத் தரத்தில்) 75 கோள்குறி வகை கேள்விகளையும், அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவு பகுதி (10-ஆம் வகுப்புத் தரத்தில்) 25 கோள்குறி வகை கேள்விகளையும் கொண்டிருக்கும்.

சுருங்கச் சொல்வதானால், முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்காக, 200 கேள்விகளை உள்ளடக்கிய மூன்று மணிநேரம் கால அலவைக் கொண்ட தேர்வாக இருக்கும்.

முதல்நிலைத் தேர்வு மொழித் தாள் பாடத்திட்டம் (பொதுத் தமிழ்) கோள்குறி வகை (10-ஆம் வகுப்புத் தரம்)

மொழிப் பாடத்தைப் பொருத்தவரை, இலக்கனம், இலக்கியம் மற்றும் தமிழ் அறிஞர்களும் அவர்தம் தொண்டும் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பகுதி (அ) இலக்கணம்

  • பொருத்துதல்-
  • (I) பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்;
  • (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
  • தொடரும் தொடர்பும் அறிதல்
  • (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
  • (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
  • பிரித்தெழுதுக
  • எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
  • பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
  • பிழை திருத்தம்

(i) சந்திப்பிழையை நீக்குதல்
(ii) ஒருமை பன்மை / பிழைகளை நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்

  • ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
  • ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
  • ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
  • வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
  • வேர்ச்சொல்லைக்கொடுத்து/ வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்
  • அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
  • சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
  • பெயர்ச்சொல்லின் வகையறிதல்
  • இலக்கணக் குறிப்பறிதல்
  • விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
  • எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
  • தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டுவினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
  • உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
  • எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

பகுதி (ஆ) இலக்கியம்

  • திருக்குறள்தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்)
  • அன்பு – பண்பு -கல்வி -கேள்வி -அறிவு -அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஓப்புரவறிதல், செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத்துணைக்கோடல், பொருள்செயல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.
  • அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
  • கம்பராமாயணம்-தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
  • புறநானூறு – அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
  • சிலப்பதிகாரம் – மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும்-ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
  • பெரியபுராணம்-நாலாயிர திவ்வியப்பிரபந்தம்-திருவிளையாடற் புராணம்-தேம்பாவணி-சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
  • சிற்றிலக்கியங்கள் – திருக்குற்றாலக்குறவஞ்சி – கலிங்கத்துப்பரணி – முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது – நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து, திருவேங்கடத்தந்தாதி, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ், பெத்தலகேம் குறவஞ்சி, அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
  • மனோன்மணியம்-பாஞ்சாலி சபதம்-குயில் பாட்டு-இரட்டுற மொழிதல்
  • (காளமேகப்புலவர்-அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்)
  • நாட்டுப்புறப்பாட்டு-சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
  • சமய முன்னோடிகள்: அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

  • பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
  • மரபுக்கவிதை-முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள், அடைமொழிபெயர்கள்.
  • புதுக் கவிதை-ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர் மோகனரங்கன் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
  • தமிழில் கடித இலக்கியம் – நாட்குறிப்பு. நேரு – காந்தி – மு.வ. – அண்ணா ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
  • நாடகக்கலை-இசைக்கலை தொடர்பான செய்திகள்.
  • தமிழில் சிறுகதைகள் தலைப்பு- ஆசிரியர்- பொருத்துதல்.
  • கலைகள்-சிற்பம்-ஓவியம்-பேச்சு-திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்.
  • தமிழின் தொன்மை தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
  • உரைநடை-மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமிநாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை – மொழி நடை தொடர்பான செய்திகள்.
  • உ.வே.சாமிநாதஐயர், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சி.இலக்குவனார்-தமிழ்ப்பணி தொடர்பான செய்திகள்.
  • தேவநேயப்பாவாணர்-அகரமுதலி, பாவலரேறு பெருஞ் சித்திரனார், தமிழ்த்தொண்டு தொடர்பான செய்திகள்.
  • ஜி.யு.போப்-வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்.
  • பெரியார்-அண்ணா-முத்துராமலிங்கத் தேவர்-அம்பேத்கர்-காமராசர்-சமுதாயத்தொண்டு.
  • தமிழகம்-ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்.
  • உலகளாவிய தமிழர்கள் சிறப்பும்-பெருமையும்-தமிழ்ப் பணியும்.
  • தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்.
  • தமிழ் மகளிரின் சிறப்பு – அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர்.முத்துலட்சுமிரெட்டி.விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை, ராணி மங்கம்மாள்)
  • 18. தமிழர் வணிகம்-தொல்லியல் ஆய்வுகள்-கடற் பயணங்கள்-தொடர்பான செய்திகள்.
  • உணவே மருந்து-நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்.
  • சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார், திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள்-மேற்கோள்கள்.

முதல்நிலைத் தேர்வு பொது அறிவு பாடத்திட்டம் கோல்குறி வகை (பட்டப்படிப்புத் தரம்)

பொது அறிவு பாடத்திட்டமானது பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், இந்திய அரசியலமைப்பு, இந்திய பொருளாதாரம், தமிழக வளற்சி நிர்வாகம் போன்ற 10 அலகுகளாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது.

அலகு-1 பொது அறிவியல்

  • (I) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் ஆய்வு – பகுத்தறிவின் ஆற்றல் – சூழலோடு இயந்துக் கற்றல் Vs பொருளுனர்ந்துக் கற்றல் – கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு கருவியாக அறிவியல்.
  • (II) பிரபஞ்சத்தின் அமைப்பு – பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் – பறுப்பொருள்களின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – இயக்கவியல், மின்சாரம் மற்றும் காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணு இயற்பியல், கதிரியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு போன்ற அடிப்படைக் கொள்கைகளின் அன்றாட பயன்பாடு.
  • (III) தனிமங்கள் மற்றும் கலவைகள், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்.
  • (IV) உயிர் அறிவியலின் முக்கிய கருத்துக்கள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள்.
  • (V) சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல்.

அலகு-2 நடப்பு நிகழ்வுகள்

  • (I) சமீபத்திய நிகழ்வுகள் – தேசிய சின்னங்கள் – மாநிலங்கள் தொடர்பான விவரங்கல் – செய்திகளில் அதிகம் இடம்பெற்ற பிரபல நபர்கள் மற்றும் இடங்கள் – விளையாட்டு மற்றும் போட்டிகள் – புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்கள்.
  • (II) அரசியல் – இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் அமைப்பு – பொது விழிப்புணர்வு மற்றும் பொது நிர்வாகம் – அரசின் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு, பொது விநியோக அமைப்புகளில் உள்ள சிக்கல்கள்.
  • (III) புவியியல் – புவியியல் அடையாளங்கள்.
  • (IV) பொருளாதாரம் – தற்போதைய சமூக – பொருளாதார சிக்கல்கள்.
  • (V) அறிவியல் – அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புகள்.

அலகு-3 இந்திய புவியியல்

  • (I) அமைவிடம் – இயற்கை பிரிவுகள் – பருவக்காலம், மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்தியாவின் ஆறுகள் – மண், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – வனம் மற்றும் வனவிலங்குகள் – வேலான் முறை.
  • (II) போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு.
  • (III) சமூக புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனங்கள், மொழியியல் குழுக்கள் மற்றும் முக்கிய பழங்குடியினர்.
  • (IV) இயற்கை பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் மாசுபாடு: காரணங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் – காலநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்.

அலகு-4 இந்திய வரலாறு மற்றும் பண்பாடு

  • (I) சிந்து சமவெளி நாகரீகம் – குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராட்டியர்கள் – விஜயநகரம் மற்றும் பாமினி அரசுகளின் காலம் – தென்னிந்திய வரலாறு.
  • (II) இந்தியாவின் சமூக – கலாச்சார வரலாற்றில் மாற்றம் மற்றும் தொடர்ச்சி.
  • (III) இந்திய கலாச்சாரத்தின் சிறப்பியல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, பழக்க வழக்கங்கள்.
  • (IV) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.

அலகு-5 இந்திய அரசியலமைப்பு

  • (I) இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முன்னுரை – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்.
  • (II) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசை நெறியுருத்தும் கோட்பாடுகள்.
  • (III) ஒன்றிய செயலாட்சி- ஒன்றிய சட்டமன்றம் – மாநில செயலாட்சி – மாநில சட்டமன்றம் உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் சட்டம்.
  • (IV) கூட்டாட்சியின் தத்துவம் – ஒன்றிய – மாநில உறவுகள்.
  • (V) தேர்தல் – இந்தியாவில் நீதித்துறை – சட்டத்தின் ஆட்சி.
  • (VI) பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்கள், மனித உரிமைகள் சாசனம்.

அலகு-6 இந்திய பொருளாதாரம்

  • (I) இந்தியப் பொருளாதாரத்தின் தன்மை – ஐந்தாண்டுத் திட்ட மாதிரிகள் – திட்டக் குழு மற்றும் நிதி ஆயோக் பற்றிய ஒரு மதிப்பீடு.
  • (II) வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதிக் கொள்கை மற்றும் பணக் கொள்கை – நிதி ஆணையம் – மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே வருவாய் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி.
  • (III) இந்தியப் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேலான்மை- வேலான்மையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – கிராமப்புற நலன் சார்ந்த திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை.

அலக்ு-7 இந்திய தேசிய இயக்கம்

  • (I) தேசிய மறுமலர்ச்சி – பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால எழுச்சி – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்களின் எழுச்சி – அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவஹர்லால் நேரு, காமராஜர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல்கலாம் ஆசாத், தந்தை பெரியார், ராஜாஜி, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பலர்.
  • (II) பல்வேறு எதிர்ப்பியக்கங்கள் சத்தியாகிரகத்தின் எழுச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
  • (III) வகுப்புவாதம் மற்றும் பிரிவினை.

அலகு-8 தமிழகத்தின் வரலாறு, கலாசாரம், பண்பாடு மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்கள்

  • (I) தமிழ் சமூகத்தின் வரலாறு, தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் சமகாலம் வரையிலான தமிழ் இலக்கியங்கள்.

(II) திருக்குறள்:
(அ) மதச்சார்பற்ற இலக்கியம்
(ஆ) அன்றாட வாழ்க்கைக்கு திருக்குறள்
(இ) மனிதநேயமும் திருக்குறளும்
(ஈ) திருக்குறள் உனர்த்தும் உலகளாவிய அறம், சமத்துவம் மற்றும் மனிதநேயம்
(உ) திருக்குறளுக்கும் சமூக – அரசியல் – பொருளாதார விவகாரங்களுக்கும் உள்ள தொடர்பு
(ஊ) திருக்குறள் உனர்த்தும் தத்துவ நெறிகள்

  • (III) விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான ஆரம்பகால போராட்டங்கள் – விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு.
  • (IV) தமிழ்நாட்டில் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு சமூக அரசியல் இயக்கங்களின் எழுச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு சிந்தணை – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்விறு இயக்கங்களுக்கும் அடிப்படையான கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.

அலகு-9 தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்

  • (I) தமிழ்நாட்டில் மனித வளர்ச்சி குறிகாட்டிகள் மற்றும் நாடு முழுவதும் ஒரு ஒப்பீட்டு மதிப்பீடு – தமிழ்நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் தாக்கம்.
  • (II) அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கான நலத்திட்டங்கள் – இடஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் சமூக வளங்களை அணுகுதல் – தமிழ்நாட்டின் பொருளாதாரப் போக்குகள் – தமிழ்நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில் சமூக நலத் திட்டங்களின் பங்கு மற்றும் தாக்கம்.
  • (III) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூக – பொருளாதார வளர்ச்சியின் மைல்கல்.
  • (IV) தமிழ்நாட்டில் கல்வி மற்றும் சுகாதார கட்டமைப்புகள்.
  • (V) தமிழ்நாட்டின் புவியியல் – பொருளாதார வளர்ச்சியில் புவியியலின் தாக்கம்.
  • (VI) பல்வேறு துறைகளில் தமிழகத்தின் சாதனைகள்.
  • (VII) தமிழகத்தில் மின் ஆளுகை.

அலகு-10 கணிதம் மற்றும் திறனறிதல் (10-ஆம் வகுப்புத் தரம்)

  • (I) சுருக்குக – சதவிகிதம் – மீப்பெரு பொதுக் காரணி (HCF) – மீச்சிறு பொது மடங்கு (LCM).
  • (II) விகிதம் மற்றும் விகிதாசாரம்.
  • (III) தனி வட்டி மற்றும் கூட்டு வட்டி – பரப்பளவு, கண அளவு – நேரம் மற்றும் வேலை.
  • (IV) தற்க திறன் – புதிர்கள் – பகடை – காட்சி திறனறிதல் – எண்ணெழுத்துத் தொடர் – எண் தொடர்கள்.

தொகுதி-II, மற்றும் II-A முதன்மைத் தேர்வுப் பாடத்திட்டம் (விரிந்துரைக்கும் வகை)

முதன்மைத் தேர்வு முதல் தாள்

தமிழ் தகுதித் தாள் பாடத்திட்டம் (10-ஆம் வகுப்புத் தரம்)

இத்தாளின் பாடத்திட்டம் கீழ்காணும் 7 முதன்மைத் தலைப்புகளை உள்ளடக்கியுள்ளது.

  • மொழிப் பெயர்த்தல்
  • (அ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
  • (ஆ) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்.
  • சுருக்கி வரைதல்
  • பொருள் உணர்திறன்
  • சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
  • கட்டுரை வரைதல் (பொது)
  • கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
  • தமிழ் மொழியறிவு

மேலே உள்ள தலைப்புகளுக்கான பாடத்திட்டங்கள்

  • தற்கால நிகழ்வுகள்
  • சமுதாயப் பிரச்சனைகள்
  • சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
  • இந்தியப் பொருளாதாரம் தொடர்பான தலைப்புகள்
  • அறிவியலும் தொழில் நுட்பமும்
  • கலையும் பண்பாடும்
  • பகுத்தறிவு இயக்கங்கள்- திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
  • இக்காலத் தமிழ்மொழி-கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ் புதிய வகைமைகள்.
  • தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்…..), சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு- இட ஒதுக்கீடும் அதன் பயன்களும்- தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
  • சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல் பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.


இரண்டாம் தாளுக்கான பாடத்திட்டம் வெகு விரைவில் பதிவேற்றப்படும்.

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *