உள்ளே
தமிழ் எழுத்துகளின் வகை தொகை……. 2
முதலெழுத்தும் சார்பெழுத்தும்… 9
மொழி முதல், இறுதி எழுத்துகள்… 14
சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்… 24
குற்றியலுகரம், குற்றியலிகரம்… 28
தமிழ் எழுத்துகளின் வகை தொகை
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.
எழுத்து இலக்கணம்
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
யாப்பு இலக்கணம்
அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவாக எழுப்பப்படுவதும் வரிவடிவாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல், ஆகிய எளிய செயல்பாடுகளால் ‘அ ‘முதல் ‘ஔ ‘வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
ஒலித்துப் பார்த்து உணர்வோம்!
அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகி ஒலிக்கின்றன.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ- ஆகிய ஏழும் நீண்டு ஒலிக்கின்றன.
குறுகி ஒலிக்கும் அ,இ,உ,எ,ஒ
ஆகிய ஐந்தும் குறில் எழுத்துகள்.
நீண்டு ஒலிக்கும்
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
ஆகிய ஏழும் நெடில் எழுத்துகள்.
ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு.
எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
மாத்திரை
மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு – 1 மாத்திரை
நெடில் எழுத்தை ஒலிக்கும் கால அளவு – 2 மாத்திரை
மெய்யெழுத்துகள்
மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் ஆகும்.
இவற்றுள் க், ச், ட்,த்,ப், ற் ஆகிய ஆறும் வல்லின மெய்கள்.
ங்,ண்,ந்,ம்,ன் ஆகிய ஆறும் மெல்லின மெய்கள்.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய ஆறும் இடையின மெய்கள்.
மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு- அரமாத்திரை
ஒவித்துப் பார்த்து உணர்வோம்
- க், ச், ட், த், ப், ம் ஆகிய ஆலும் வன்மையாக ஒலிக்கின்றன.
ங், ஞ், ண், ந், ம், ன்- ஆகிய ஆதும் மென்மையாக ஒலிக்கின்றன.
ய், ர், ல், வ், ழ், ள்-ஆகிய ஆலும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டித்தும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
உயிர்மெய்
மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றுபவை உயிர்மெய் எழுத்துகள்.
மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்தால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது. மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்தால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது. ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து
தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும்உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்தாகும்.
ஆய்த எழுத்தை ஒலிக்க ஆகும் காலஅளவு அரை மாத்திரை
கற்பவை கற்றபின்
உங்கள் பெயர் மற்றும் உங்கள் நண்பர்களது பெயர்களுக்கான மாத்திரை அளவைக் கண்டுபிடி.
(எ.கா.) கபிலர்- 1 + 1 + 1 + 1/2 = 31/2
மதிப்பீடு
கொடுக்கப்பட்டுள்ள மாத்திரை அளவுக்கேற்பச் சொற்களை எழுதுக
வ.எண் | குறிப்பு | சொல்லின் மாத்திரை அளவு | சொல் |
1. | உயிரெழுத்தில் தொடங்கும் சொல் | 2 மாத்திரை | அது |
2. | ஓரெழுத்துச் சொல் | 2 மாத்திரை | |
3. | வல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல் | 4 மாத்திரை | |
4. | மெல்லின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல் | 4 மாத்திரை | |
5. | இடையின உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொல் | 4 மாத்திரை | |
6. | ஆய்த எழுத்து இடம்பெறும் சொல் | 2 ½ மாத்திரை |
எழுத்துகளின் பிறப்பு
அ, உ, க, ப ஆகிய எழுத்துகளை ஒலித்துப் பாருங்கள். வாயைத் திறந்து ஒலித்தாலே அ என்னும் எழுத்து ஒலிக்கிறது. உ என்னும் எழுத்தை ஒலிக்கும் போது இதழ்கள் குவிகின்றன. நாக்கின் முதற்பகுதி மேல் அண்ணத்தில் ஒட்டும் போது க என்னும் எழுத்து பிறக்கிறது. ப என்னும் எழுத்து இதழ்கள் இரண்டும் ஒட்டுவதால் பிறக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் பிறக்கும் இடமும் பிறக்கும் முயற்சியும் வெவ்வேறாக உள்ளன.
பிறப்பு
உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில் பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர். எழுத்துகளின் பிறப்பினை இடப்பிறப்பு, முயற்சிப் பிறப்பு என இரண்டு வகையாகப் பிரிப்பர்.
எழுத்துகளின் இடப்பிறப்பு
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
ஆய்த எழுத்து தலையை இடமாகக் கொண்டு பிறக்கிறது.
எழுத்துகளின் முயற்சிப் பிறப்பு
உயிர் எழுத்துகள்
அ, ஆ ஆகிய இரண்டும் வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கின்றன.
இ, ஈ, எ, ஏ, ஐ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய்ப் பல்லைப் பொருந்தும் முயற்சியால் பிறக்கின்றன.
உ, ஊ, ஒ, ஓ, ஔ ஆகிய ஐந்தும் வாய்திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்றன.
மெய் எழுத்துகள்
க், ங் – ஆகிய இருமெய்களும் நாவின் முதற்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ச், ஞ் – ஆகிய இருமெய்களும் நாவின் இடைப்பகுதி, நடு அண்ணத்தின் இடைப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
ட், ண் – ஆகிய இருமெய்களும் நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கின்றன.
த், ந் – ஆகிய இருமெய்களும் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கின்றன.
ப், ம் – ஆகிய இருமெய்களும் மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கின்றன.
ய் – இது நாக்கின் அடிப்பகுதி, மேல் வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கிறது.
ர், ழ் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கின்றன.
ல் – இது மேல்வாய்ப் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கிறது.
ள் – இது மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலால் பிறக்கிறது.
வ் – இது மேல்வாய்ப்பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கிறது.
ற், ன் – ஆகிய இருமெய்களும் மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கின்றன.
சார்பெழுத்துகள்
ஆய்த எழுத்து வாயைத்திறந்து ஒலிக்கும் முயற்சியால் பிறக்கிறது. பிற சார்பெழுத்துகள் யாவும் தத்தம் முதலெழுத்துகள் தோன்றும் இடங்களிலேயே அவை பிறப்பதற்கு உரிய முயற்சிகளைக் கொண்டு தாமும் பிறக்கின்றன.
கற்பவை கற்றபின்
‘ஆய்தம்’ – இச்சொல்லில் உள்ள ஒவ்வோர் எழுத்தின் வகையையும், அது பிறக்கும் இடத்தையும் பட்டியல் இடுக.
எழுத்துகள் | ஆ | ய் | த | ம் |
வகை | ||||
பிறக்கும் இடம் |
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) இ, ஈ
ஆ) உ, ஊ
இ) எ, ஏ
ஈ) அ, ஆ
ஆய்த எழுத்து பிறக்கும் இடம் _____.
அ) மார்பு
ஆ) கழுத்து
இ) தலை
ஈ) மூக்கு
வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் _____.
அ) தலை
ஆ) மார்பு
இ) மூக்கு
ஈ) கழுத்து
நாவின் நுனி அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் _____.
அ) க், ங்
ஆ) ச், ஞ்
இ) ட், ண்
ஈ) ப், ம்
கீழ் இதழும் மேல்வாய்ப்பல்லும் இணைவதால் பிறக்கும் எழுத்து
அ) ம்
ஆ) ப்
இ) ய்
ஈ) வ்
பொருத்துக.
க், ங் | நாவின் இடை, அண்ணத்தின் இடை |
ச், ஞ் | நாவின் நுனி, மேல்வாய்ப்பல்லின் அடி |
ட், ண் | நாவின் முதல், அண்ணத்தின் அடி |
த், ந் | நாவின் நுனி, அண்ணத்தின் நுனி |
சிறுவினா
எழுத்துகளின் பிறப்பு என்றால் என்ன?
மெய் எழுத்துகள் எவற்றை இடமாகக் கொண்டு பிறக்கின்றன?
முகர, லகர, ளகர மெய்களின் முயற்சிப் பிறப்பு பற்றி எழுதுக.
முதலெழுத்தும் சார்பெழுத்தும்
எழுத்துகள் இரண்டு வகைப்படும்
முதல் எழுத்து
சார்பு எழுத்து
முதல் எழுத்து
உயிர் எழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகள் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும். பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை இருக்கின்றன. எனவே இவற்றை முதல் எழுத்துகள் என்பர்.
சார்பு எழுத்துகள்
முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள். இவை பத்து வகைப்படும்.
உயிர்மெய்
ஆய்தம்
உயிரளபெடை
ஒற்றளபெடை
குற்றியலிகரம்
குற்றியலுகரம்
ஐகாரக்குறுக்கம்
ஔகாரக்குறுக்கம்
மகரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
இவ்வகுப்பில் உயிர்மெய், ஆய்தம் ஆகிய இரண்டு சார்பெழுத்துகள் பற்றிக் காண்போம்.
உயிர்மெய்
மெய் எழுத்துகளும் உயிர் எழுத்துகளும் ஒன்றுடன் ஒன்று சேர்வதால் உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன
உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும். ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்.
முதல் எழுத்துகளைச் சார்ந்து வருவதால் இவை சார்பெழுத்து வகையுள் அடங்கும்.
ஆய்தம்
மூன்று புள்ளிகளை உடைய தனித்த வடிவம் பெற்றது.
முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை என்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
நுட்பமான ஒலிப்புமுறையை உடையது.
தனக்குமுன் ஒரு குறில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
தனித்து இயங்காது.
முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்
கற்பவை கற்றபின்
முதல் எழுத்துகள், சார்பு எழுத்துகள் தொடர்பைப் பற்றி விவாதிக்க
முதல் எழுத்துகள் மட்டும் இடம்பெறும் சொற்களை எழுதுக.
(எ.கா.) ஆம்
முதல் எழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.
(எ.கா.) குருவி
மதிப்பீடு
முதல் எழுத்துகள் என்பவை யாவை? அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?
சிந்தனை வினா
உயிர்மெய், ஆய்தம் இவை இரண்டும் சார்பு எழுத்துகளாகக் கூறப்படக் காரணம் தருக
மேலும் சார்பெழுத்துகள்
மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.
சார்பெழுத்து:
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய இரண்டு குறித்து இங்கு காண்போம்.
அளபெடுத்தல்_நீண்டு ஒலித்தல்.
பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.
எ.கா. அம்மாஅ, தம்பீஇ
1. உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது ‘உயிரளபெடை’ எனப்படும்.
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
அ. செய்யுளிசை அளபெடை:
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய,நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை ‘இசைநிறை அளபெடை’ என்றும் கூறுவர்.
‘ஓஒ’தல் வேண்டும்-மொழி முதல்
‘உறாஅ’ர்க்கு உறுநோய்-மொழியிடை
நல்ல ‘படாஅ’ பறை-மொழியிறுதி
ஆ. இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது ‘இன்னிசை அளபெடை’ ஆகும்.
கெடுப்ப’தூஉம்’ கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்ப’தூஉம்’ எல்லாம் மழை.
இ. சொல்லிசை அளபெடை:
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது ‘சொல்லிசை அளபெடை’ ஆகும்.
உரன’சைஇ’ உள்ளம் துணையாகச் சென்றார்
வரன’சைஇ’ இன்னும் உளேன்.
நசை: விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக ‘நசைஇ’ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.
- ஒற்றளபெடை:
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ‘ஒற்றளபெடை’ ஆகும்.
‘எங்ங’கிறைவன்
‘எஃஃ’கிலங்கிய கையராய் இன்னுயிர்
மொழி முதல், இறுதி எழுத்துகள்
கீழே உள்ள சொற்களைக் கவனியுங்கள்.
நன்றி ணன்றி னன்றி
இவற்றுள் நன்றி என்பதே சரியான சொல் அல்லவா?
பிழையின்றி எழுத எந்தெந்த எழுத்துகளை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதும் மிக இன்றியமையாதது.
தமிழ் எழுத்துகளின் வகை, தொகை பற்றி அறிந்து கொண்டோம். அவற்றுள் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் வருவதில்லை. சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் பற்றித் தெரிந்துகொள்வோம்.
மொழி முதல் எழுத்துகள்
மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
ங – வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்தாக வருகிறது. எ.கா- ஙனம்
* (இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.)
ஞ – வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
ய – வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
வ – வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, ஆகிய ஏழு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
(எ. கா) க- வரிசை எழுத்துகள் கடல், காக்கை, கிழக்கு, கீற்று, குருவி, கூந்தல், கெண்டை, கேணி, கைகள், கொக்கு, கோலம், கௌதாரி.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது.
ட, ண, ர, ல.மு, ள, ற, ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வராது.
டமாரம், ரம்பம், லண்டன். ஃப்ரான்ஸ், டென்மார்க், போன்றவை பிறமொழிச் சொற்கள். இவற்றைத் தமிழில் ஒலி பெயர்த்து எழுதுகிறோம்.
மொழி இறுதி எழுத்துகள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
ஞ், ண், ந், ம், ய், ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ்)
மொழி இறுதியாகா எழுத்துகள்
சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.
உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் ணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
கார்த்திக், ஹாங்காங், சுஜித், ஜாங்கிரி, திலீப், மியூனிச் போன்ற பிறமொழிப் பெயர்ச்சொற்களில் இவ்வெழுத்துகள் இறுதி எழுத்துகளாக இடம்பெறுவதுண்டு.
எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
(நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்)
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
அளபெடை பற்றி உயர் வகுப்புகளில் அறிந்துகொள்வீர்கள்.
கற்பவை கற்றபின்
ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்துகள் வரிசையில் மொழிமுதல் எழுத்துகளாக அமைபவை எவை? அவ்வெழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களை அகராதியைப் பார்த்து எழுதுக.
மதிப்பீடு
மொழி முதலில் வரும் உயிர்மெய் எழுத்துகள் யாவை?
மொழி இறுதியில் வராத மெய்கள் என்னென்ன?
சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து எது?
இன எழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும். ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும். சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும்.
(எ.கா.) திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும். சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும்.
(எ. கா) ஓஒதல், தூஉம், தழீஇ
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.
கற்பவை கற்றபின்
தங்கப் பாப்பா வந்தாளே!
சிங்கப் பொம்மை தந்தாளே!
பஞ்சு போன்ற கையாலே!
பண்டம் கொண்டு வந்தாளே!
பந்தல் முன்பு நின்றாளே!
கம்பம் சுற்றி வந்தாளே!
தென்றல் காற்றும் வந்ததே!
தெவிட்டா இன்பம் தந்ததே!
இப்பாடலில் இடம்பெற்றுள்ள இன எழுத்துச் சொற்களை எடுத்து எழுதுக.
* மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
மெல்லினத்திற்கான இன எழுத்து இடம்பெறாத சொல் எது?
அ) மஞ்சள்
ஆ) வந்தான்
இ) கண்ணில்
ஈ) தம்பி
தவறான சொல்லை வட்டமிடுக.
அ) கண்டான்
ஆ) வென்ரான்
இ) நண்டு
ஈ) வண்டு
பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.
பிழை | திருத்தம் |
தெண்றல் | |
கன்டம் | |
நன்ரி | |
மன்டபம் |
குறுவினா
இன எழுத்துகள் என்றால் என்ன?
மயங்கொலிகள்
மணம் – மனம்
மேலே உள்ள இரண்டு சொற்களையும் கவனியுங்கள். உச்சரிக்கும் போது ஏறத்தாழ ஒன்று போலவே ஒலிக்கின்றன. ஆனால் இரண்டுக்கும் இடையே பொருள் வேறுபாடு உண்டு. இவ்வாறு உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
ண, ன, ந
ல, ழ, ள
ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.
ண, ன, ந – எழுத்துகள்
ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
தெரிந்து தெளிவோம்
சொற்களில் ண, ன இடம்பெறும் வகை
ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும்
(எ.கா.) கண்டம், வண்டி, நண்டு
ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும்
(எ.கா.) மன்றம், நன்றி, கன்று
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
(எ.கா.) வாணம் – வெடி
வானம் – ஆகாயம்
பணி – வேலை
பனி – குளிர்ச்சி
ல, ள, ழ – எழுத்துகள்
ல- நா ( நாவின் இருபக்கங்கள் தடித்து ) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் வகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் முகரம் தோன்றும். (ளகரமும் முகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும்). ழ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு
பொருள் வேறுபாடு உணர்க.
விலை -பொருளின் மதிப்பு
விளை – உண்டாக்குதல்
விழை – விரும்பு
இலை – செடியின் இலை
இளை – மெலிந்து போதல்
இழை – நூல் இழை
ர, ற – எழுத்துகள்
ர- நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
ற – நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.
பொருள் வேறுபாடு உணர்க
எரி – நீர்நிலை
ஏறி – மேலே ஏறி
கூரை – வீட்டின் கூரை
கூறை – புடவை
கற்பவை கற்றபின்
ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க.
மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
சிரம் என்பது _______-(தலை / தளை)
இலைக்கு வேறு பெயர் _______ (தளை / தழை)
வண்டி இழுப்பது _______ (காலை / காளை)
கடலுக்கு வேறு பெயர் _______ (பரவை / பறவை)
பறவை வானில் _______ (பறந்தது / பரந்தது)
கதவை மெல்லத் _______ (திறந்தான் / திரந்தான்)
பூ _______ வீசும். (மனம் / மணம்)
புலியின் _______ சிவந்து காணப்படும். (கன் / கண்)
குழந்தைகள் _______ விளையாடினர். (பந்து / பன்து)
வீட்டு வாசலில் _______ போட்டனர்.(கோலம் / கோளம்)
தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.
தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.
வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.
குறுவினாக்கள்
மயங்கொலி எழுத்துகள் யாவை?
ண, ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.
சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள்
சுட்டு எழுத்துகள்
அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.
அகச்சுட்டு
இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.
புறச்சுட்டு
அவ்வானம் – இம்மலை – இந்நூல் – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.
அண்மைச்சுட்டு
இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு – இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.
சேய்மைச்சுட்டு
அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் – இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.
தெரிந்து தெளிவோம்
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ‘உ’ என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(எ.கா.) உது, உவன்
சுட்டுத்திரிபு
அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம், இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.
இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.
கற்பவை கற்றபின்
கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி. “இந்த மலரைப் பார் அந்த மலரை விட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.
இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.
வினா எழுத்துகள்
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். சில வினா எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும்.
எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
மொழியின் முதலில் வருபவை – எ, யா (எங்கு, யாருக்கு)
மொழியின் இறுதியில் வருபவை – ஆ, ஓ (பேசலாமா, தெரியுமோ)
மொழி முதலிலும் இறுதியிலும் வருபவை – ஏ (ஏன், நீதானே)
அகவினா
எது, யார், ஏன் இச்சொற்களில் உள்ள வினா எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகளுக்குப் பொருள் இல்லை.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.
புறவினா
அவனா? வருவானோ? இச்சொற்களில் உள்ள ஆ, ஓ ஆகிய வினா எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும்.
இவ்வாறு வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவது புறவினா எனப்படும்.
கற்பவை கற்றபின்
பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக.
செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் “ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது?” என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.
என் வீடு _______ உள்ளது. (அது / அங்கே)
தம்பி _______ வா (இவர் / இங்கே)
நீர் _______ தேங்கி இருக்கிறது? (அது / எங்கே)
யார் _______ தெரியுமா? (அவர் / யாது)
உன் வீடு _______ அமைந்துள்ளது? (எங்கே / என்ன)
குறுவினா
சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?
அகவினா, புறவினா – வேறுபாடு யாது?
சிந்தனை வினா
அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.
குற்றியலுகரம், குற்றியலிகரம்
நினைவு கூர்க
தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளம் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம்இ, உயிரளபெடை, ஒற்றளபெடை குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம்.
குற்றியலுகரம்
குழந்தை, வகுப்பு பாக்கு ஆகிய சொற்களைச் சொல்லிப் பாருங்கள். மூன்றுசொற்களிலும் ‘கு’ என்னும் எழுத்தை உச்சரிப்பதில் வேறுபாடு இருப்பதை உணரலாம். அவ்வெழுத்து சொல்லின் முதலிலும் இடையிலும் வரும்பொழுது முழுமையாக ஒலிக்கிறது. சொல்லின் இறுதியில் வரும்பொழுது ஒருமாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கிறது. கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்குப் பதிலாக அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இவ்வாறு தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். குறுமை + இயல் + உகரம் = குற்றியலுகரம்
(எ.கா.) காசு, எஃகு, பயறு, பாடு, பந்து, சால்பு
தனிக்குறில் எழுத்தை அடுத்து வரும் வல்லின உகரங்கள் ஒரு மாத்திரை அளவுக்கு முழுமையாக ஒலிக்கும். வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும் முழுமையாகவே ஒலிக்கும். இவ்வாறு ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்.
(எ.கா.) புகு. பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய எழுத்துச் சாரியைகளைப் பயன்படுத்துகிறோம்.
குறில் எழுத்துகளைக் குறிக்க ‘கரம்’ (எ.கா) அகரம், இகரம், உகரம், சுகரம், மகரம்
நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘கான்’ (எ.கா) ஐகான், ஓளகான்
குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க ‘காரம்’ (எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஓளகாரம்
ஆய்த எழுத்தைக் குறிக்க ‘கேனம்’ (எ.கா.) அஃகேனம்
குற்றியலுகரத்தின் வகைகள்
குற்றியலுகரம் தனக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு ஆறு வகையாகப் பிரிக்கப்படும்.
நெடில் தொடர்க் குற்றியலுகரம்
தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் நெடில் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும். இவை ஈரெழுத்துச் சொற்களாக மட்டும் அமையும்.
(எ.கா) பாகு, மாசு, பாடு, காது, ஆறு
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்
ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) எஃகு, அஃது.
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா.) அரசு (ர = ர் + அ)
கயிறு (யி = ய் + இ)
ஒன்பது (ப = ப் + அ)
வரலாற (லா = ல் + ஆ)
வன்தொடர்க் குற்றியலுகரம்
வல்லின (க்,ச்,ட்,த்,ப்,ற்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் வன்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) பாக்கு, பேச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று
மென்தொடர்க் குற்றியலுகரம்
மெல்லின (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா.) பங்கு, மஞ்சு, பண்பு, பந்து, அம்பு, கன்று
இடைத்தொடர்க் குற்றியலுகரம்
இடையின (ய்,ர்,ல்,வ்,ழ்,ள்) மெய் எழுத்துகளைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
(எ.கா) எய்து, மார்பு, சால்பு, மூழ்கு
‘வ்’ என்னும் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரச் சொற்கள் இல்லை.
மேலும் க,டு,று ஆகியவை இறுதியாக அமையும் இடைத்தொடர் குற்றியலுகரச் சொற்களும் இல்லை.
குற்றியலிகரம்
வரகு+யாது இந்த இரு சொற்களையும் சேர்த்து விரைவாக ஒலித்துப் பாருங்கள். வரகியாது என ஒலிப்பதை அறியலாம். முதல் சொல்லின் இறுதியில் உள்ள ‘கு’ என்னும் எழுத்து ‘கி’ என்று ஒலிக்கிறது. அதுவும் முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரை மாத்திரை அளவாக்க குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும். குறுமை + இயல் + இகரம் = குற்றியலிகரம்
குற்றியலிகரம் இரண்டு இடங்களில் மட்டும் வரும்
இடம் – 1
குற்றியலுகரச் சொற்களைத் தொடர்ந்து யகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட சொற்கள் வரும்போது குற்றியலுகரத்தில் உள்ள உகரம் இகரமாக மாறும். அந்த இகரம் தனக்குரிய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக்க குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) கொக்கு + யாது = கொக்கியாது (க் + உ)
தோப்பு + யாது = தோப்பியாது
(ப் + உ) (ப் + இ)
நாடு + யாது = நாடியாது
(ட் + உ) ( ட் + இ)
எனப்படுவது + யாது = எனப்படுவதியாது
(த் + உ) (த் + இ)
இடம் – 2
‘மியா’ என்பது ஒர் அசைச்சொல் (ஒசை நயத்திற்காக வருவது) இதில் ‘மி’ யில் (மி = ட்ம் + இ) உள்ள இகரம் குற்றியலிகரம் ஆகும். இது சொற்களில் இடம்பெறும் போது தனக்குரிய மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலி’கும்.
(எ.கா.) கேள் + மியா = கேண்மியா
செல் + மியா = சென்மியா
குற்றியலிகரம் தற்போது உரைநடை வழக்கில் இல்லை. இலக்கியங்களில் மட்டுமே உள்ளது.
கற்பவை கற்றபின்
ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப் பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள் அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.
குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.
(எ.கா.) ஒன்று – 1 + ½ + ½ = 2
கு,சு,டு,து,று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.
மதிப்பீடு
கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.
ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழ’கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து
நெடில்தொடர்
ஆய்தத்தொடர்
உயிர்த்தொடர்
வன்தொடர்
மென்தொடர்
இடைத்தொடர்
பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.
பசு, விடு, ஆறு, கரு _______
பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து _______
ஆறு, மாசு, பாகு, அது _______
அரசு, எய்து, மூழ்கு, மார்பு_______
பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு _______
குறுவினா
குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக
குற்றியலிகரம் என்றால் என்ன-
நால்வகைக் குறுக்கங்கள்
ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளம் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.
ஐகாரக்குறுக்கம்
ஐ,கை,பை என ஐகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரியஇரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. வையம், சமையல், பறவை என சொற்களில் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஐகாரம் ஐகாரக்குறுக்கம் எனப்படும்.
ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கும்.
ஓளகாரக்குறுக்கம்
ஓள, வௌ என ஔகார எழுத்து தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது. ஔவையார், வௌவால் எனச் சொற்களின் முதலில் வரும்போது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஔகாரம் ஔகாரக்குறுக்கம் எனப்படும்.
ஒளகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது.
மகரக்குறுக்கம்
அம்மா, பாடம் படித்தான் ஆகிய சொற்களில் மகர மெய்யெழுத்து தனக்குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
வலம் வந்தான் என்பதில் மகர மெய்யெழுத்தை அடுத்து வகர எழுத்து வருவதால் மகரமெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
போலும் என்னும் சொல்லைப் போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசைச் சீர்மைக்காகப் பயன்படுத்தினர். இச்சொற்களில் மகரமெய்யானது ன்,ண் ஆகிய எழுத்துகளை அடுத்து வருவதால் தனக்குரிய அரை மாத்திரை அளிவிலிருந்து குறைந்து கால் மாத்திதிரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் மகரம்மகரக்குறுக்கம் எனப்படும்.
ஆய்தக் குறுக்கம்
அஃது, எஃகு ஆகியசொற்களில் ஆய்த எழுத்து, தன’குரிய அரை மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.
முள் + தீது என்பது முஃடீது எனவும், கல் + தீது என்பது கஃறீது எனவும் சேரும். இச்சொற்களில் உள்ள ஆய்த எழுத்து, தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரை அளவில் ஒலிக்கிறது. இவ்வாறு குறைந்து ஒலிக்கும் ஆய்தம் ஆய்தக்குறுக்கம் எனப்படும்.
கற்பவை கற்றபின்
ஐகார, ஔகார, மகர, ஆய்தக்குறுக்கங்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் சொற்களைத் தொகுத்து எழுதுக.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு _______
அ) அரை
ஆ) ஒன்று
இ) ஒன்றரை
ஈ) இரண்டு
மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் _______
அ) போன்ம்
ஆ) மருண்ம்
இ) பழம் விபந்தது
ஈ) பணம் கிடைத்தது
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது_______-
அ) ஐகாரக் குறுக்கம்
ஆ) ஔகாரக் குறுக்கம்
இ) மகரக்குறுக்கம்
ஈ) ஆய்தக் குறுக்கம்
குறுவினா
ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?
சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
புணர்ச்சி
தமிழ், அமுதம் ஆகிய இரு சொற்களையும் சேர்த்துச் சொல்லிப் பாருங்கள். தமிழமுதம் என்று ஒலிக்கிறது அல்லவா?
இவற்றுள் முதலில் உள்ள சொல்லை நிலைமொழி என்றும் அதனுடன் வந்து சேரும் சொல்லை வருமொழி என்றும் கூறுவர். இவ்விரு சொற்களும் சேரும்போது நிலைமொழியின் இறுதி எழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் இணைகின்றன. இவ்வாறு நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவதைப் புணர்ச்சி என்கிறோம்.
நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிரீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) சிலை + அழகு = சிலையழகு (லை = ல் + ஐ)
நிலைமொழியின் இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்யீற்றுப் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) மண் + அழகு = மண்ணழகு
வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது உயிர்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + உண்டு = பொன்னுண்டு
வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் அஃது மெய்முதல் புணர்ச்சி எனப்படும். (எ.கா.) பொன் + சிலை = பொற்சிலை (சி = ச் + இ)
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். (எ.கா.) தாய் + மொழி = தாய்மொழி (இரு சொற்களிலும் எம்மாற்றமும் நிகழவில்லை.)
உடல் + ஓம்பல் = உடலோம்பல் (இங்கு ல் + ஓ இணைந்து லோ என்னும் உயிர்மெய் எழுத்து ஆயிற்று. புதிய எழுத்து எதுவும் தோன்றவோ வேறு எழுத்தாகத் திரிய வோ மறையவோ இல்லை.)
இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழுமாயின், அது விகாரப் புணர்ச்சி எனப்படும். விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது தோன்றல் விகாரம் ஆகும். (எ.கா.) தமிழ் + தாய் = தமிழ்த்தாய்
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது திரிதல் விகாரம் ஆகும். (எ.கா.) வில் + கொடி = விற்கொடி
நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது கெடுதல் விகாரம் ஆகும். (எ.கா.) மனம் + மகிழ்ச்சி = மனமகிழ்ச்சி
இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு. (எ.கா.) நாடகம் + கலை = நாடகக்கலை
இங்குக் கெடுதல் விகாரத்தின்படி நிலைமொழி ஈற்றில் உள்ள மகர மெய் மறைந்தது. தோன்றல் விகாரத்தின்படி க் என்னும் மெய்யெழுத்து தோன்றியது.
கற்பவை கற்றபின்
இயல்பு, தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய புணர்ச்சிகளுக்குரிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பட்டியல் ஒன்று உருவாக்குக.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
விகாரப் புணர்ச்சி _____ வகைப்படும்.
அ) ஐந்து
ஆ) நான்கு
இ) மூன்று
ஈ) இரண்டு
‘பாலாடை’ – இச்சொல்லுக்குரிய புணர்ச்சி _____
அ) இயல்பு
ஆ) தோன்றல்
இ) திரிதல்
ஈ) கெடுதல்
பொருத்துக.
1. மட்பாண்டம் | தோன்றல் விகாரம் |
2. மரவேர் | இயல்புப் புணர்ச்சி |
3. மணிமுடி | கெடுதல் விகாரம் |
4. கடைத்தெரு | திரிதல் விகாரம் |
சிறுவினா
இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
மரக்கட்டில் – இச்சொல்லைப் பிரித்து எழுதிப் புணர்ச்சியை விளக்குக.
மேலும் புணர்ச்சி
நிலைமொழி – வருமொழி
புணர்ச்சி என்பது இரண்டு சொற்களுக்கு இடையில் நிகழ்வது. இரண்டுக்கு மேற்பட்ட சொற்களாக இருந்தாலும் நிலைமொழி, வருமொழி – வருமொழி, நிலைமொழியாகி நிற்கும். எனவே, இருமொழிகளுக்கு இடையே நிகழ்வதுதான் புணர்ச்சி. ஒரு சொல்லோடு ஒட்டுகளோ, இன்னொரு சொல்லோ இணையலாம். அவ்வாறு இணையும் போது ஒலி நிலையில் மாற்றங்கள் நிகழ்வதுண்டு; மாற்றம் இல்லாமலும் சேர்வதுண்டு.
புணர்ச்சியில் நிலைமொழியின் இறுதி எழுத்தைப் பொறுத்து உயிரீறு, மெய்யீறு எனவும் வருமொழியின் முதல் எழுத்தைப் பொறுத்து உயிர்முதல் மெய்ம்முதல் எனவும் பிரிக்கலாம்…
புணர்மொழியின் இயல்பு
எழுத்து வகையால் சொற்கள் நான்கு வகைப்படும்.
கலை + அழகு | உயிரீறு |
மண் + குடம் | மெய்யீறு |
வாழை + இலை | உயிர்முதல் |
வாழை + மரம் | மெய்ம்முதல் |
மேலும் இப்புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் எழுத்து அடிப்படையில் நான்காகப் பிரிக்கலாம்.
உயிர்முன் உயிர் | மணி (ண்+இ) + அடி = மணியடி |
உயிர்முன் மெய் | பனி + காற்று = பனிக்காற்று |
மெய்ம்முன் உயிர் | ஆல் + இலை = ஆலிலை |
மெய்ம்முன் மெய் | மரம் + (க்+இ) கிளை = மரக்கிளை |
இயல்பு புணர்ச்சியும் விகாரப் புணர்ச்சியும்
புணர்ச்சியில் நிலைமொழியும் வருமொழியும் அடையும் மாற்றங்களின் அடிப்படையில் புணர்ச்சியை இருவகைப் படுத்தலாம். புணர்ச்சியின்போது மாற்றங்கள் எதுவுமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சி எனப்படும்.
வாழை + மரம் = வாழைமரம்
செடி + கொடி = செடிகொடி
மண் + மலை = மண்மலை
புணர்ச்சியின்போது ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். இந்த மாற்றம் மூன்று வகைப்படும். அவை:
தோன்றல், திரிதல் கெடுதல்.
நுழைவு + தேர்வு நுழைவுத்தேர்வு (தோன்றல்)
கல்லூரி + சாலை = கல்லூரிச்சாலை (தோன்றல்)
பல் + பசை = பற்பசை (திரிதல்)
புறம் + நானூறு = புறநானூறு (கெடுதல்)
உயிரீற்றுப் புணர்ச்சி
உடம்படுமெய்
உயிரை ஈறாக உடைய சொற்களின்முன் உயிரை முதலாக உடைய சொற்கள் வந்து சேரும்; அப்போது சொற்கள் சேராமல் தனித்து நிற்கும்; ஒன்று சேராத உயிரொலிகளை ஒன்று சேர்ப்பதற்கு அங்கு ஒரு மெய் தோன்றும். இதனை உடம்படுமெய் என்று சொல்வர்.
நிலைமொழியின் ஈற்றில் ‘இ,ஈ,ஐ’ என்னும் உயிரெழுத்துகளை ஈறாக உடைய சொற்கள் நிற்கும். அவற்றின் முன், பன்னிரண்டு உயிர்களையும் முதலாவதாக உடைய சொற்கள் சேரும். அந்நிலையில் யகரம் உடம்படுமெய்யாக வரும்.
மணி + அழகு = மணி + ய் + அழகு = மணியழகு
தீ + எரி = தீ + ய் + எரி = தீயெரி
ஓடை + ஓரம் = ஓடை + ய் + ஓரம் = ஓடையோரம்
‘இ, ஈ, ஐ’ தவிர, பிற உயிரெழுத்துகள் நிலைமொழி ஈறாக வரும்போது அவற்றின்முன் வருமொழியில் பன்னிரண்டு உயிர்களும் வந்து புணர்கையில் வகர மெய் தோன்றும்.
பல + உயிர் = பல + வ் + உயிர் = பலவுயிர்
பா + இனம் = பா + வ் + இனம் = பாவினம்
நிலைமொழி ஈறாக ஏகாரம் வந்து, வருமொழியில் பன்னிரண்டு உயிரெழுத்துகளையும் உடைய சொற்கள் வந்து புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும்.
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுனிவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்.
(நன்.162)
புணர்கையில் யகரமோ வகரமோ தோன்றும்
சே + அடி = சே + ய் + அடி = சேயடி; சே + வ் + அடி = சேவடி
தே + ஆரம் = தே + வ் + ஆரம் = தேவாரம்
இவனே + அவன் = இவனே + ய் + அவன் = இவனேயவன்
குற்றியலுகரப் புணர்ச்சி
வட்டு + ஆடினான் = வட்(ட்+உ) + ஆடினான் = வட்ட் + ஆடினான் = வட்டாடினான்
நிலைமொழியாக வரும் குற்றியலுகரத்தின் முன் உயிரெழுத்துகள் வந்தால், நிலைமொழியிலுள்ள உகரம் கெடும். வருமொழியிலுள்ள உயிரெழுத்து நின்ற மெய்யுடன் இணையும்.
குற்றியலுகரத்தைப் போலவே சில முற்றியலுகரங்களுக்கும் இவ்விரு விதிகளும் பொருந்தும்.
உறவு + அழகு = உற(வ் +உ) = உறவ் + அழகு = உறவழகு
புணர்ச்சி
இயல்பு
பொன் + வளை = பொன்வளை
விகாரம்
பூ + கூடை = பூக்கூடை
கல் + சிலை = கற்சிலை
கபிலர் + பரணர் = கபிலபரணர்
உடம்படுமெய்
மணி + அடி = மணியடி
கரு + அருள் = குருவருள்
தே + இலை = தேயிலை
தே + ஆரம் = தேவாரம்
குற்றியலுகரம்
எனது + உயிர் = எனதுயீர்
நாடு + யாது = நாடியாது
நிலவு + ஒளி = நிலவொளி
தெரிந்து தெளிவோம்
தனிக்குறில் அல்லாது, சொல்லுக்கு இறுதியில் வல்லின மெய்கள் ஏறிய உகரம் (கு, சு, டு, து, பு, று) தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும். சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.
நாக்கு, வகுப்பு | வன்தொடர்க் குற்றியலுகரம் |
நெஞ்சு, இரும்பு | மென்தொடர்க் குற்றியலுகரம் |
மார்பு, அமிழ்து | இடைத்தொடர்க் குற்றியலுகரம் |
முதுகு, வரலாறு | உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் |
எஃகு, அஃது | ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் |
காது, பேசு | நெடில் தொடர்க் குற்றியலுகரம் |
மெய்ம்மயக்கம்
புணர்ச்சியில் இரு சொற்கள் இணையும்போது வருமொழியில் க, ச, த, ப வந்தால் சில இடங்களில் மீண்டும் அதே எழுத்துத் தோன்றும். இதை ‘வலி மிகுதல்’ என்பர். இது போன்றே சில இடங்களில் மெல்லினமும் மிகுதல் உண்டு. குறிப்பாக, ங, ஞ, ந, ம என்ற நான்கு எழுத்துகளும் இவ்வாறு மிகும்.
‘ய’கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்.
எ.கா. மெய் + மயக்கம் மெய்ம்மயக்கம்
மெய் + ஞானம் = மெய்ஞ்ஞானம்
செய் – நன்றி – செய்ந்நன்றி
வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் ய,ர,ழ முன்னர் மெல்லினம் மிகும்.
எ.கா. வேய்+குழல்=வேய்ங்குழல்
கூர்+சிறை = கூர்ஞ்சிறை
பாழ்+கிணறு = பாழ்ங்கிணறு
‘புளி’ என்னும் சுவைப் பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமன்றி மெல்லினமும் மிகும்.
எ.கா. புளி+கறி = புளிங்கறி
புளி+சோறு = புளிஞ்சோறு
உயிரெழுத்தை இறுதியில் கொண்ட மரப் பெயர்களுக்கு முன்னர் மெல்லினம் மிகும்.
எ.கா. மா+பழம் = மாம்பழம்
விள+காய் = விளங்காய்
‘பூ’ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்.
எ.கா. பூ+கொடி = பூங்கொடி
பூ+சோலை = பூஞ்சோலை
பூ+தொட்டி = பூந்தொட்டி
கற்பவை கற்றபின்…
எழுத்துவகை அறிந்து பொருத்துக.
இயல் – அ. உயிர் முதல் உயிரீறு
புதிது ஆ. உயிர் முதல் மெய்யீறு
ஆணி – இ. மெய்ம் முதல் மெய்யீறு
வரம் – ஈ. மெய்ம்முதல் உயிரீறு
புணர்ச்சிகளை ‘முதல், ஈற்றுச்’ சொல்வகையால் பொருத்துக.
செல்வி + ஆடினாள் – அ.மெய்யீறு + மெய்ம்முதல்
பாலை + திணை – ஆ.மெய்யீறு + உயிர்முதல்
கோல் + ஆட்டம் – இ.உயிரீறு + உயிர்முதல்
மண் + சரிந்தது – ஈ.உயிரீறு + மெய்ம்முதல்
சேர்த்து எழுதுக.
அ) தமிழ் + பேசு
ஆ) தமிழ் + பேச்சு
இ) கை + கள்
ஈ) பூ + கள்
பொருத்தமான உடம்படுமெய்யுடன் இணைக்க.
அ) பூ + இனம்
ஆ) இசை + இனிக்கிறது
இ) திரு + அருட்பா
ஈ) சே + அடி
சிந்தனை கிளர் வினாக்கள்
அ) குற்றியலுகரம், முற்றியலுகரம் இவற்றின் வேறுபாட்டை எழுதுக.
ஆ) ‘புணர்ச்சி இலக்கணம் கற்பது உரைநடை எழுதுவதற்கு உதவும்’ – இக்கூற்றை ஆராய்க.
இ) கீழ்க்காணும் பத்தியில் உள்ள சொற்களைச் சேர்த்து எழுதுக.
தமிழின் ‘தொன்மை + ஆன’ இலக்கண ‘நூல் + ஆகிய’ ‘தொல்காப்பியம் + இல்’ ‘சிற்பம் + கலை’ பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. போரில் விழுப்புண்பட்டு இறந்த வீரருக்கு நடுகல் நடப்படும். ‘அ + கல்லில்’ அவ்வீரரின் உருவம் பொறிக்கப்பெறும். ‘தமிழக + சிற்பம் + கலை’யின் தோற்றத்திற்கான சான்றாக ‘இதனை + கொள்ளலாம்’. சிலப்பதிகாரத்தில் ‘கண்ணகிக்கு + சிலை’ வடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. மாளிகைகளில் பல ‘சுதை + சிற்பங்கள்’ இருந்ததை மணிமேகலை மூலம் ‘அறிய + முடிகிறது’.
ஈ) படக்காட்சியிலிருந்து இருசொல் தொடர்களை அமைத்து, அவற்றின் புணர்ச்சி வகையினைக் கண்டறிக.
எ.கா.மரக்கிளை – விகாரப் புணர்ச்சி, மூன்று பெண்கள் – இயல்பு புணர்ச்சி